நாளைய ஊரடங்கு நிலவரம் பற்றிய அரசின் அறிவிப்பு!

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடருமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் நாளை (1) காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டு மீண்டும் மதியம் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும்.

அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் அதுலுகமவ, கண்டி மாவட்டத்தில் அக்குரனவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக்கப்பட்டுள்ளன. இந்த கிராமங்களிலிருந் வெளியேறுவதோ, நுழைவதோ முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here