கண்டாவளை பிரதேசத்தில் மக்களை தேடிச் சென்று சமூர்த்தி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளை தொடர்ந்து கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் மக்களை தேடிச் சென்று சமூர்த்தி கொடுப்பனவு மற்றும் உணவுப் பொருட்கள் என்பன உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் ஒன்று கூடுவதனை தவிர்க்கும் முகமாக அவர்களுக்குரிய சமூர்த்திக் கொடுப்பனவை வீடு வீடாக சென்று சமூர்த்தி உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டு வரும் அதேவேளை கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தாகரன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் உணவுப் பொருட்களையும் மக்களின் வீடுகளுக்கேச் சேன்று வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் இன்று (31) மயில்வாகனபுரம், பிரமந்தனாறு கிராமங்களுக்கு சமூர்த்தி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, தொடர்ச்சியாக ஏனைய கிராமங்களுக்கும் வழங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here