பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: யாழ் கட்டளை தளபதி!

உலகம் முழுவதும் மிக விரைவாக பரவி வரும் புதிய உயிர்க் கொல்லி தொற்றான கொரோனா வைரஸிடமிருந்து எமது தாய் நாட்டினை காப்பதற்காக அனைத்து மக்களும் தமது முழு ஒத்துழைப்புக்களை வழங்கி ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலம் இதுஎன யாழ்ப்பாண பாதுகாப்புபடை கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்

யாழ் குடா நாட்டிற்குள் உட்புகுதல் மற்றும் வெளிச்செல்லலிற்கான வீதிகள் இரண்டு உள்ளன. அந்த இரண்டு வீதிகளிலுமான போக்குவரத்துக்களை கட்டுப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புக்கள் உங்களிடமிருந்து கிடைக்கும் பொருட்டு கொடிய தொற்றான கொரோனா வைரஸினை கட்டுப்படுத்த முடியும்.

உயிர்க்கொல்லி தொற்றான கொரோனா வைரஸினை எமது நாட்டிலிருந்து தூரமாக விரட்டி உங்களிற்கான வாழ்க்கையினை முன்பிருந்த கால சூழலில் இருந்தது போன்று நடாத்திக் கொண்டு செல்வதற்கு அரசின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு மற்றும் சுகாதார பிரிவின் மூலமாக நடாத்தப்படுகின்ற செயற்பாடுகளிற்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் அவர்களால் வழங்கப்படுகின்ற
அறிவுறுத்தல்களிற்கமைவாக செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

கொடிய தொற்றான கொரோனா வைரஸின் பாதிப்பிற்குடபட்ட உலகின் மற்றைய நாடுகளுடன் எமது நாட்டினை ஒப்பிட்டுப் பார்த்தால் இலங்கையில் இந்த வைரஸ் தொற்று பரவுவதனை தடுக்கும் முயற்சியானது மிகவும் பலனளித்துள்ளமையினாலும் எடுக்கும் முழு முயற்சிகளினாலும் எமது நாடு மற்றைய நாடுகளை விட முன்னோக்கி நிற்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண பிரதேசத்தினுள் இதுவரை ஒரு நோயாளி மாத்திரம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் அதேவேளை அந்த நபருக்கு வெளிநாட்டவர் மூலமாகவே இந்த கொரோனா தொற்று பரவி இருக்கிறது. இன்றுவரை அந்த நோயாளிக்கு மாத்திரம் பரவியிருப்பதும் யாழ்ப்பாண மக்களாகிய நீங்களும் அரச பாதுகாப்பு பிரிவு, சுகாதாரப் பிரிவு மற்றும்அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் ஆற்றப்பட்ட பரிகாரத்தின் பலனாகவே கிடைக்கப்பட்டது என்பதனை கூறிக்கொள்ள முடியும்.

இப்பிரதேசத்தில் இருக்கின்ற இந்தநிலை இது போன்றே தொடரவும் மேலும் வேறு நோயாளிகள் பெருகாமல் இருக்கவும் நாம் முயற்சிக்க வேண்டும். எனவே உங்களுடைய ஒத்துழைபபுக்களையும் வேண்டி நிற்கின்றோம்.

இந் நிலையில் போடப்பட்டிருக்கின்ற ஊரடங்குச் சட்டமானது உங்களது பாதுகாப்பிற்காகவே பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பாதுகாப்பு பிரிவினருக்கு உங்களது ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இருப்பினும் அத்தியவசியமான சேவையினை மேற்கொள்வதற்கும் அத்தியவசிய உணவு பானங்களிற்கான போக்குவரத்து மற்றும் விவசாய வேலைகளை மேற்கொள்ளவும் போடப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்ட நேரங்களில் சிறு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் உங்களுடைய பயிர்ச் செய்கைகளை
மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

விஷேடமாக வீட்டினுள்ளே இருக்கும் நீங்கள் உங்களுடைய அயலவர்களுடன் உங்களது நேரத்தினை செலவிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். தமது அன்றாட வேலைகளில் ஈடுபடும் போது ஒருவர் மற்றவருக்கிடையில் குறைந்தது ஒரு மீட்டர் தூரத்தினை பேணுவதுடன் மணித்தியாலத்திற்கு ஒரு தடவை அரசினால் அங்கீகரிக்கப்பட்ட வைத்திய அறிவுறுத்தலிற்கு அமைய கைகளை சவற்காரமிட்டு கழுவிக்கொள்ளவும்.

இந்த பாரதூரமான உயிர்க்கொல்லி நிலைக்கு முழு உலகமும் இன்று முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது. முற்காலத்திலும் வாழ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இதுபோன்ற வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்தமை வரலாற்றில் கூறப்பட்டிருக்கின்றது. இவை அனைத்திலு விட
அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு கொடிய தொற்றே இக்காலகட்டத்தில் பரவி இருக்கின்றது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அத்துடன் அரச பாதுகாப்பு பிரிவு சுகாதாரப் பிரிவு மூலம் வழங்கப்படும்

அறிவுறுத்தல்களை கண்டிப்பாக சரிவர கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் யாழ்ப்பாண மக்களிடம் மிக தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இந் நிலமையினை தடுப்பதற்காக பொது மக்களாகிய உங்களுக்கு மிக பெரிய பொறுப்பு உள்ளது என்பதனை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். இந்த கொடிய தொற்றினை எமது தாய் நாட்டிலிருந்து விரட்ட நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம். என தனது கருத்தினை தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here