ஊரடங்குவேளையில் கிளிநொச்சியில் வலைத்தள அலுவலகம் அடித்துடைப்பு: ஒருவருக்கு போத்தலால் குத்து!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது ஊடக அலுவலகம் ஒன்று அடித்து உடைக்கப்பட்டுள்ளதோடு சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்று (30) மாலை சுமார் 5.30 மணியளவில் கிளிநொச்சி உதயநகர் மேற்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

இணையத்தளம் ஒன்றின் ஊடக அலுவலகம் ஒன்றிற்குள் நேற்று (30)மாலை உள்நுழைந்து ஐந்து பேர் கொண்டு குழு ஒன்று எவ்வித கேள்விகளும் இன்றி அங்கு கடமையில் இருந்த சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் மீது போத்தல் ஒன்றை உடைத்து குத்தியுள்ளனர். இதன்போது அவர் தடுக்க முற்பட்ட போது அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளதோடு, அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த மடிக்கணிணி, உட்பட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த நிலையில் கடமையில் இருந்த ஊடகவியலாளர்கள் உட்பட நான்கு பணியாளர்கள் ஒரு அறைக்குள் நுழைந்து கதவினை பூட்டிக்கொண்டு இருந்த போது குறித்த குழுவினர் கதவினை அடித்து உடைத்துவிட்டு உந்துருளியில் தப்பிச் சென்றுள்ளர்.

இதன் போது உடனடியாக கிளிநொச்சி பொலீஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் இன்று (31) காலை வரை பொலீஸார் சம்பவ இடத்திற்கு சமூகமளிக்கவில்லை எனவும் தாங்கள் இன்று காலை பொலீஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்யவுள்ளதாகவும் தெரிவித்த ஊடக அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் மேற்கொள்ள வந்தவர்களின் ஒருவரின் புகைப்படம் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here