நேற்று உயிரிழந்த கொரோனா நோயாளி யாழ்ப்பாணம் வந்து போனாரா?

கொரோனா தொற்றினால் உயிரிழந்த நபரின் உடல் நேற்று நள்ளிரவு தகனம் செய்யப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு, பலகத்துறையை சேர்ந்த முஹமத் ஜமாத் என்பவர் நேற்று உயிரிழந்தார். இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த இரண்டாவது நபர் இவராவார்.

நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கொச்சிக்கடையில் உள்ள மயோக்கஹேன பொது மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது குடும்ப உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், உடலை புதைக்க விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் அதை அதிகாரிகள் கேட்கவில்லையென்றும் குடும்பத்தினர் தெரிவித்ததாக சமூக ஊடங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, உயிரிழந்த முஹமத் ஜமாத் கடந்த 11ம் திகதி யாழ்ப்பாணம் வந்து திரும்பியதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுவரை அதை உறுதிசெய்யவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here