‘மருத்துவத்தை போல எனது ஊழியமும் அத்தியாவசியமானது’: கொரோனா பீதிக்குள் மக்களை கூட்டி ஆராதனை செய்த போதகர் கைது!

கொரோனா அபாயத்திலிருந்து மக்களை காப்பாற்ற ஒன்றுகூடுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதை மீறி பெருமளவு மக்களை கூட்டி ஜெப ஆராதனையில் ஈடுபட்டிருந்த மத போதகரை கை து செய்துள்ளதாக அமெரிக்காவின் புளோரிடா மாகாண பொலிசார் அறிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் நூற்றிற்கும் அதிகமானவர்களை ஒன்றுகூட்டி ஆராதனையில் ஈடுபட்டுள்ளார்.

போதகர் ரோட்னி ஹோவர்ட் பிரவுன் கைது செய்யப்பட்டு நேற்று திங்கள்கிழமை 500 டொலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

புளோரிடாவின் தம்பா பகுதியில் இந்த பெரிய தேவாலயம் அமைந்துள்ளது.

அந்த தேவாலயம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில், போதுமான சமூக இடைவெளியை பேணுமாறு டிஜிட்டல் அறிவுறுத்தல் ஒன்றை நிறுவியிருநததாக அந்தபகுதி ஷெரீப் தெரிவித்துள்ளார்.

அதையும் மீறி, சமூக இடைவெளிகளை பேணாமல் போதகர் ஆராதனையை நடத்தியது குற்றம் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இதற்கெல்லாம் அசராத போதகர், தேவாலயமும், வழிபாடும் மக்களின் அததியாவசிய தேவைகள் என தனது ருவிற்றரில் குறிப்பிட்டிருந்தார். பொலிஸ், தீயணைப்பு துறைகளை போல, தமது ஊழியமும் அத்தியாவசிய சேவை, எமது தேவாலய கதவுகள் எப்பொழுதும் மக்களிற்காக திறந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இந்த தேவாலயத்தில் நடந்த நிகழ்வொன்றில், அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்மற்ற ஆன்மீக ஆலோசகர் பவுலா வைட் கெய்ன் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here