வவுனியாவில் களத்தில் இறங்கிய விசேட அதிரடிப்படையினர்

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை காப்பாற்றும் நோக்கில் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளை சுத்தம் செய்யும் விசேட அதிரடிப்படையினரின் நடவடிக்கையின் மூன்றாம் கட்ட செயற்றிட்டம் இன்று (31) காலை முன்னெடுக்கப்பட்டது

இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளை சுத்தப்படுத்தி கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்களை காப்பற்றும் நோக்கில் மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறங்கியுள்ளனர்.

வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் வவுனியா பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஆகியோருடன் இணைந்து விசேட அதிரடிப்படையினரினால் முன்னெடுக்கப்பட்ட இச் செயற்றிட்டம் வவுனியா நகரசபை முன்றலில் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினர் கடந்த (24.03.2020) மாலை வவுனியா புதிய பேரூந்து நிலையம் , பழைய பேரூந்து நிலையம் , வங்கிகள் , எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்களை சுத்தப்படுத்தியதுடன் , இரண்டாம் கட்டமா (25.03.2020) காலை வவுனியா புகையிரத நிலையம் , வவுனியா மாவட்ட செயலகம் , வவுனியா பிரதேச செயலகம் , பொதுச்சந்தை , வங்கிகள் , எரிபொருள் மீள் நிரப்பு நிலையங்கள் போன்றவற்றை சுத்தப்படுத்தப்பட்டது.

இன்றையதினம் (31.03.2020) மூன்றாம் கட்டமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை , வவுனியா நீதிமன்ற வளாகம் , சந்தை , ஆலயங்கள் என்பவற்றை சுத்தப்படுத்தும் பணியில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது 1990 அவரச அன்புலன்ஸ் சேவை வாகனங்களுக்கு சுத்தம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here