யாழ் நீதிமன்ற வழக்குகளின் மறு தவணை திகதிகள்!

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் மார்ச் 16ஆம் திகதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதிவரை 3 வாரங்களில் தவணையிடப்பட்ட வழக்குகள் இடம்பெறும் மறு தவணைகள் நீதிமன்றப் பதிவாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியல் வழக்குகள் தவிர்த்த ஏனைய வழக்குகளின் மறு தவணை விவரங்களே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் மார்ச் 16ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூன் மாதம் 15ஆம் திகதி திங்கட்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.

மார்ச் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூன் மாதம் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.

மார்ச் 18ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூன் மாதம் 17ஆம் திகதி புதன்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.

மார்ச் 19ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூன் மாதம் 18ஆம் திகதி வியாழக்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.

மார்ச் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூன் மாதம் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.

மார்ச் 23ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூன் மாதம் 22ஆம் திகதி திங்கட்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.

மார்ச் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூன் மாதம் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.

மார்ச் 25ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூன் மாதம் 24ஆம் திகதி புதன்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.

மார்ச் 26ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூன் மாதம் 25ஆம் திகதி வியாழக்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.

மார்ச் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூன் மாதம் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.

மார்ச் 30ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூன் மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.

மார்ச் 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறவிருந்த வழக்குகள் ஜூன் மாதம் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி புதன்கிழமை தவணையிடப்பட்ட வழக்குகள் ஜூலை மாதம் முதலாம் திகதி புதன்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வியாழக்கிழமை தவணையிடப்பட்ட வழக்குகள் ஜூலை மாதம் 2ஆம் திகதி வியாழக்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை தவணையிடப்பட்ட வழக்குகள் ஜூலை மாதம் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு மறு தவணையிடப்பட்டுள்ளது.

எனவே சந்தேக நபர்கள் வழக்காளிகள் சாட்சிகள் மற்றும் சட்டத்தரணிகள் இந்த ஒழுங்கில் வழக்குகள் மறுதவணையிடப்பட்டுள்ளமையை பின்பற்றுமாறு கேட்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் 20 பேர் இன்று திங்கட்கிழமை சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடந்த இருவாரங்களில் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here