கொரோனா அவசர எண்ணில் சமோசா கேட்டு நச்சரித்த ஆசாமி: நேரில் சென்ற நீதிபதி கொடுத்த தண்டனை!

கொரோனா பரவாமல் தடுக்க ஏப்ரல்14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன.

உ.பி.,யின் ராம்பூர் மாவட்ட அவசர உதவி எண்ணுக்கு இளைஞர் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. தன்னுடைய வீட்டு முகவரிக்கு சூடான சமோசா வேண்டுமென அவர் கேட்டுள்ளார். தொடர்ச்சியாக பலமுறை உதவி எண்ணுக்கு அழைத்து நச்சரித்துள்ளார்.. இதனால் கடுப்பான மாவட்ட மாஜிஸ்திரேட் ஆஞ்சநேய குமார் சிங், போனில் தொந்தரவு செய்த ஆசாமிக்கு பாடம் புகட்ட முடிவு செய்தார்.

சூடான சமோசாவுடன் போனில் தொந்தரவு செய்த நபரின் வீட்டிற்கு நேரில் சென்று டெலிவரி செய்த மாஜிஸ்திரேட், உதவி எண்ணுக்கு அழைத்து தொந்தரவு செய்ததற்கு தண்டனையாக , அப்பகுதியில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நாடு சுகாதார நெருக்கடி காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள சூழலில், தேவையற்ற முறையில் அழைப்பு விடுப்பதை மற்றவர்கள் தவிர்க்க வேண்டுமெனவும் கேட்டுகொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here