‘கொரோனாவிற்கல்ல… கர்ப்ப பரிசோதனைக்கே போனேன்’: ரஜினி பட நாயகி விளக்கம்!

நடிகை ராதிகா ஆப்தே ரஜினிக்கு ஜோடியாக ‘கபாலி’ திரைப்படத்தில் நடித்ததன் முலம் தமிழில் மிகவும் பிரபலமானவர். அவர் முன்னதாக ‘வெற்றி செல்வன்’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ மற்றும் சித்திரம் பேசுதடி-2 ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். ஹிந்தி, பெங்காலி, மராட்டி, மலையாளம், தெலுங்கு மற்றும் ஆங்கில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தைரியமான வேடங்களை ஏற்று நடிக்கும் இவரது கணவர் பெனடிக்ட் டெய்லர் இங்கிலாந்தை சேரந்த இசைக் கலைஞராவார். அதனால் அவர் இந்தியாவிற்கும் லண்டனுக்கும் அடிக்கடி பயணம் செய்பவர். சமீபத்தில் அவர் பிரிட்டனில் உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அதையடுத்து அவரருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக வதந்திகள் பரவியது.

அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தான் மருத்துவமனையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் “மருத்துவமனைக்கு வந்தது, கொரோனாவிற்காக அல்ல. யாரும் வருத்தப்படத் தேவையில்லை, ஆல் இஸ் வெல், தனிமைப்படுத்திக்கொண்டு பத்திரமாக உள்ளேன். தோழியின் வழக்கமான கர்ப்ப பரிசோதனைக்கா அழைத்து வந்தேன்.!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here