ஒரே போட்டாவால் நெட்டிசன்களை கவர்ந்த சன்னி லியோன்!

சன்னி லியோனுக்கு அறிமுகம் தேவையில்லை. கனடாவில் ஆபாச படங்களில் ஆரம்பித்து,இந்தியாவில் பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது கணவர் டானியல் வெப்பார் உடன் மும்பையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி ஐந்து வருடம் ஆகிறது. கடந்த 2017 இல் இவர் மும்பையில் 21 மாத பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். குழந்தையின் பெயர் நிஷா.

2018 இல் இவர்களுக்கு வாடகைத்தாய் வாயிலாக இரட்டை ஆண் குழந்தை பிறந்தனர். ஆசேர் மற்றும் நோவா சிங் அவர்களின் பெயர்கள்.

பாலிவுட்டில் தொடர்ந்து படங்களில் நடித்து பெயர்பெற்ற சன்னிலியோன் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பெரிய உதவிகளை செய்து வருகிறார். இதனால் உலகமெங்கும் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தற்போது மராத்தியப் பாரம்பரிய உடையில் பிள்ளையாரை வழிபடுவதை போல் வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here