பரவை முனியம்மா காலமானார்

பிரபல நாட்டுப்புற பாடகியும் திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா (76) காலாமானார்.

தூள், சண்டை, காதல் சடுகுடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்தவர், ஆயிரக்கணக்கான மேடை நிகழ்ச்சிகளில் தன் பாடல் மூலம்  திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து வந்தவர், சிங்கம் போல பாடல் மூலம் பிரபலமானவர். பின்னர் சில படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தவர், சிறுநீரக கோளாறு மற்றும் வயது மூப்பு காரணமாக திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.

இந்த நிலையில் சமீப காலமாக வயது மூப்பு மற்றும் உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த பரவை முனியாம்மா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

பரவை முனியம்மா மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது இறுதி சடங்கு  ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here