கமல் பாதி விக்ரம் மீதி- விஜய் சேதுபதியின் சீதக்காதி அய்யா மேக்கிங் வீடியோ!

0

விஜய் சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கியவர் பாலாஜி தரணீதரன்.மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ‘சீதக்காதி’ என்ற படத்தை இயக்க உள்ளார். இது விஜய் சேதுபதியின் 25 வது படம்.ஏற்கனவே ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படத்தில் வயதான கேரக்டரில் நடித்த விஜய்சேதுபதி தற்போது மீண்டும் ‘சீதக்காதி’ என்ற படத்தில் கிட்டத்தட்ட 80 வயது முதியவர் தோற்றத்தில் நடிக்க போகிறார்.

பேஷன் ஸ்டூடியோ என்கிற பட நிறுவனத்தின் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், மற்றும் அருண் வைத்தியநாதன் தயாரிக்கும் “சீதக்காதி” கதை அமைப்பில் மிக வித்தியாசமானது என்று கருதப்படுகிறது.

இந்நிலையில் இன்று விஜய் சேதுபதிக்கு எவ்வாறு ப்ரோஸ்த்தெடிக் மேக் அப், போடப்பட்டது என்பதை ரசிகர்களுக்கு காமிக்கும் விதமாக வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here