20 வயது பிரேசில் டென்னிஸ் வீரருக்கு கொரோனா தொற்று

இத்­தா­லி­யின் ‘செரி ஆ’ காற்­பந்து லீக்­கில் விளை­யா­டிய பல வீரர்கள் கொரோனா கிருமித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

பிரே­சில் நாட்­டைச் சேர்ந்த 19 வயது டென்­னிஸ் வீரர் தியாகோ செபோத். மார்ச் 1 ஆம் திகதி நடை­பெற்ற சிலி பொதுவிருதுப் போட்டியில் நோர்வே வீரரை வீழ்த்தி வெற்­றி­யா­ளர் பட்­டம் வென்­றார். இதன்­மூ­லம் மிக இளம் வய­தில் ஏடிபி வெற்­றி­யா­ளர் பட்­டத்தை வென்ற பிரே­சில் வீரர் என்ற பெரு­மை­யைப் பெற்­றார்.

இந்­நி­லை­யில், கடந்த 10 நாட்­க­ளுக்கு முன் கொரோனா அறிகுறியால் அவ­திப்­பட்டு வந்­துள்­ளார். இத­னால் பரி­சோ­தனை மேற்­கொண்­டார். அதில் கொரோனா தொற்று இருப்­பது தெரிய வந்­தது. இத­னால் சிகிச்சை மேற்­கொண்டு வரு­கி­றார்.

இது­கு­றித்து அவர் கூறு­கை­யில் ‘‘நான் தற்­போது கிரு­மித்தொற்­றால் பாதித்­துள்­ளேன். இன்­று­தான் மாதிரி பரி­சோ­த­னை­யில் தெரிய வந்தது. பத்து நாட்­க­ளுக்கு முன் காய்ச்­சல் இருந்­தது, அத்­து­டன் அறி­குறி தென்­பட்­டது. ஆனால் இன்­னும் சில நாட்­களில் கிருமியின் தாக்­கம் குறைந்து குண­ம­டைந்து விடு­வேன்.

கடந்த நில நாட்­க­ளாக நன்­றாக இருப்­ப­தாக உணர்­கி­றேன். ஆனால், ஒவ்­வொ­ரு­வ­ரும் மகிழ்ச்­சி­யாக இருக்க வேண்­டும் என்­ப­தால் நான் வீட்­டிற்குள்­ளேயே இருந்து வரு­கி­றேன். இது மிக­வும் கொடிய நோய். என்­றா­லும் ஒவ்­வொ­ரு­வ­ரு­டைய வலி­மை­யா­லும் இதை கட்­டுப்­ப­டுத்த முடி­யும்,’’ என்­றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here