ஆபத்திலுள்ள இன்னொரு கொரோனா நோயாளிக்கு இரத்ததானம் வழங்கினார், கொரானாவிலிருந்து மீண்டு முதலாவது இலங்கையர்!

கொரோனா தொற்றிற்கு இலக்கான முதலாவது இலங்கையர் அண்மையில் பூரண சுகமடைந்த அண்மையில் வீடு திரும்பியிருந்தார்.

அவர் மீளவும் இன்று வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

அவர் சிகிச்சைகளிற்காக அழைத்து வரப்படவில்லை. மாறாக, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் இன்னொரு கொரோனா நோயாளிக்கு தேவையான இரத்தம் வழங்குவதற்காக வைத்தியசாலைக்கு வந்திருந்தார்.

ஆபத்தான் நோயாளியின் இரத்த மாதிரியும், குணமடைந்த கொரோனா நோயாளியின் இரத்த மாதிரியும் ஒரே வகையானது. வைத்தியசாலையில் இரத்தம் கையிருப்பில் இல்லாததையடுத்து, அவரை தொடர்பு கொண்ட வைத்தியசாலை இரத்தத் தேவையை குறிப்பிட்டது. அவர் இரத்தம் வழங்க சம்மதித்ததையடுத்து, நோயாளர் காவு வண்டி மூலம் மீள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இரத்ததானம் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here