மூன்றரை இலட்சம் ரூபா செலவிட்டு இன்று மாகாணசபையில் எடுக்கப்பட்ட அதி முக்கிய தீர்மானம்!

வடமாகாணசபையில் தமிழசுக்கட்சி இன்று நடத்திய சிறப்பு அமர்வு “சப்“ என முடிந்துள்ளது. இன்றைய அமர்வின் முடிவில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டு, முதலமைச்சருக்கும் ஆளுனருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

“அரசியலமைப்பிற்குட்பட்டு, நீதிமன்ற அறிவுறுத்தலிற்குமவைவாக அமைச்சர்களை உடனடியாக முதலமைச்சர் ஆளுனருக்கு பரிந்துரைத்து, புதிய அமைச்சரவையை நிறுவி, மாகாணசபையின் பணிகளை சுமுகமாக முன்னெடுக்க வேண்டுமென இந்த சபை வலியுறுத்துகிறது“ என்ற தீர்மானமே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

டெனிஸ்வரனை மீள அமைச்சராக நியமிக்க வேண்டுமென்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கட்டளையும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாகாணசபையின் ஒரு அமர்வை நடத்த நேரடி செலவாக இரண்டரை இலட்சம் ரூபாவும், மறைமுக செலவாக ஒரு இலட்சம் ரூபாவுமாக மொத்தம் முன்றரை இலட்சம் ரூபா மக்களின் வரிப்பணம் செலவாகுமென்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here