கொரோனாவினால் உயிரிழந்த யுவதி: இளையவர்கள் அலட்சியம் வேண்டாம்!


கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 21 வயது பெண் ஒருவர் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷையரின் ஹை வைகோம்பைச் சேர்ந்த சோலி மிடில்டன் (21) என்ற யுவதி கடந்த வாரம் இறந்தார்.

அவரது அத்தை எமிலி மிஸ்திரி வெளியிட்ட பேஸ்புக் பதிவில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உங்களால் இயன்றதை செய்யும்படி மற்றவர்களையும் கேட்டுக் கொள்ளும்படி அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

கொரொனா வைரஸ் முதியவர்களையே தாக்குமென நம்பும் பல இளையவர்கள் அவதானமில்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், அனைவரும் எச்சரிக்கையை கடைப்பிடிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்று நிலவரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளும்படியும் தெரிவித்துள்ளார்.

“ஒரு தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசுகிறேன். இந்த வைரஸ்  எனது 21 வயது மருமகளின் உயிரைப் பறித்தது. அவளுக்கு சுகாதார பிரச்சனைகள் எதுவும் இல்லை. இந்த வைரஸின் உண்மை நம் கண்களுக்கு முன்புதான் வெளிப்படுகிறது. தயவுசெய்து, அரசாங்க வழிகாட்டுதல்களை பின்பற்றவும். உங்களை திடப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், மற்றவர்களைப் பாதுகாக்கவும். வைரஸ் பரவவில்லை, மக்கள் வைரஸை பரப்புகிறார்கள்.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here