ஊரடங்கு பற்றிய புதிய நேர அறிவிப்பு!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, புத்தளம் மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு  ஊரடங்கு தளர்த்தப்பட்டு, மீளவும் பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளது.

இந்த ஊரடங்கு எதிர்வரும் 30ம் திகதி காலை 6 மணிக்கு மீண்டும் தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுலாகும்.

இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள ஏனைய மாவட்டங்களின் ஊரடங்கு மீண்டும் 2 மணிக்கு அமுலாகும்.

இந்த ஊரடங்கு எதிர்வரும் 30ம் திகதி காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு, மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்படும்.

இதேவேளை, கொரோனா பரவும் அபாய வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் ஊரடங்கு விலக்கப்படாமல் தொடர்ந்து அமுலில் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here