முல்லைத்தீவில் முன்னுதாரணம்: நோயாளர்களின் வீடு தேடிச் செல்லும் மருத்துவக்குழு!

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திருமதி நிரோசினி திலீபன் தலைமையில் வைத்தியர் நிரோசா, சிரேஸ்ட தாதியர் தர்மராசா, சுகிந்தராசா, மருந்தாளர், பணியாளர்கள், வாகன சாரதி ஆகியோர் தங்களது வைத்தியசாலையில் மாதாந்த கிளினிக் பெறுவோருக்கு நடமாடும் சேவை மூலம் ஒவ்வொருவருடைய வீட்டு வாசலுக்கு சென்று பரிசோதித்து அவர்களுக்குரிய மருந்துகளை நேற்று (25) வழங்கி வருகினர்.

இதன்போது, ஏனைய நோயாளிகளுக்கும் மருந்துகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலையின் எல்லைக்குட்பட்ட உண்ணாப்பிளவு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு, வண்ணாங்குளம், மணற்குடியிருப்பு, முல்லைத்தீவு நகரம், கரைச்சிகுடியிருப்பு, செல்வபுரம், முள்ளிவாய்க்கால் கிழக்கு ஆகிய கிராமங்களுக்கு இந்த மருத்துவ சேவை வழங்கவுள்ளனர்.

நேற்று (25) உண்ணாப்புளவு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு, ஆகிய கிராமங்களுக்கு சென்று தங்களது மருத்துவ சேவையினை வழங்கியுள்ளனர்

இன்று ஏனைய கிராமங்களுக்கு மருத்துவ சேவையினை வளங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக கருத்து தெருவித்த சமூக ஆர்வலர் பீட்டர் இளஞ்செழியன், கடவுள் போல் வீட்டு வாசல் தேடிச் சென்று தங்களது மகத்தான மருத்துவ சேவையினை வழங்கி வருகின்றனர். ஊரடங்கு சட்டம் பிறப்பித்த இந்த வேளையில் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கு இவ் நேரத்தில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கு மிகப்பெரும் சேவையாகும்.

இவ் சேவையினை முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோரி நிற்கின்றேன் என்றும், இவ் சேவையினை வழங்கி வரும் வைத்தியகலாநிதி நிரோசினி தலைமையிலான மருத்துவ குழுவுக்கும் அதற்கு அனுமதி வழங்கிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here