3 மாதங்களின் பின்னர் பொதுத் தேர்தல்?

நாடாளுமன்ற பொதுத் தேர்தல்கள் 3 மாதங்களிற்கு தள்ளிப் போகலாமென தெரிகிறது.

ஏப்ரல் 25ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், உலகளாவிய கொரோனா அச்சுறுத்தல் இலங்கையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. தொற்று அதிகரித்ததையடுத்து, மக்களை வீடுகளிற்குள் முடக்கி, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டுள்ளது.

கடந்த 12ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் கோரப்பட்டிருந்தன.

வேட்புமனு கோரல் முடிந்ததும், தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார்.

தேர்தல் தொடர்பான அறிவிப்பு ஏப்ரல் 30ஆம் திகதி விடப்படுமெனவும், மே மாதம் 14ஆம் திகதிக்கு பின்னரான ஒரு நாள் தேர்தலுக்காக அறிவிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேர்தலை 3 மாதங்களின் முன்னர் நடத்துவதற்கு அரசு ஆலோசித்து வருகிறது. இது குறித்த கலந்துரையாடல் நேற்றைய அமைச்சரவை கூட்டத்திலும் இடம்பெற்றதை தமிழ்பக்கம் அறிந்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here