ஊரடங்கு உத்தரவில் பகல் கொள்ளையடித்த பிரபல இணையத்தள விற்பனை நிறுவனம்: அதிகாரிகள் அதிரடிப் பாய்ச்சல்!

கொழும்பில் பிரபலமான இணையத்தள சில்லறை விற்பனை நிறுவனமான கப்ரூகாவின் பகல் கொள்ளை கையும் மெய்யுமாக சிக்கியது.

இணையத்தளம் மூலமாக சில்லறை விற்பனை பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் கப்ரூகா. இணையத்தளம் மூலம் பொருட்களை முன்பதிவு செய்தால், வீட்டுக்கு அவற்றை வழங்குவார்கள்.

ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதை பயன்படுத்தி பொருட்களின் விலையை உயர்த்தி, இந்த நிறுவனம் பகல் கொள்ளையடிப்பதாகவும் நுகர்வோர் அதிகாரசபையிடம் பலர் முறையிட்டனர்.

இதன்படி, நேற்று (25) நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் இந்த நிறுவனத்திற்குள் அதிரடியாக பாய்ந்தனர்.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. மீன் ரின் 550, பெரிய வெங்காயம் 500, பருப்பு ஒரு கிலோ 180 ருபா, மா 150 ரூபாவிற்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

அதிக விலை அறவிட்ட வாடிக்கையாளர்களிடம் உடனடியாக பணத்தை மீள கையளிக்க உத்தரவிட்டதுடன், நிறுவனத்தின் மீது வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here