புதிய கொரோா மையமாகிறது அமெரிக்கா: எகிறும் உயிரிழப்புக்கள்!

கோவிட்- 19 (கொரோனா) வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்காவில் 942 பேர் உயிரிழந்துள்ளனர். 65,000 க்கும் மேற்பட்டவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அதிகமான மக்கள் பரிசோதிக்கப்படுவதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை, வோஷிங்டன் மற்றும் நியூயோர்க் பகுதிகள் வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வோஷிங்டனில் குறைந்தது 101 பேரும், நியூயோர்க்கில் 199 பேரும் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, பல மாநிலங்கள் அவசரகால நிலைகளை அறிவித்து பாடசாலைகள் மற்றும் வணிகங்களை மூட உத்தரவிட்டன. சமூக விலகலையும் சுய தனிமைப்படுத்தலையும் கடைப்பிடிக்க மாநிலங்கள் மக்களை ஊக்குவித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளார். ஆரம்பத்தில் வைரஸைக் குறைத்து மதிப்பிட்டதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, ஒவ்வொரு மாநிலமும் எத்தனை வழக்குகள் உறுதிப்படுத்தியுள்ளன, எத்தனை இறப்புகள் பதிவாகியுள்ளன என்பதைப் பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here