மட்டக்களப்பில் தொற்று நீக்கம்!


இன்று வியாழக்கிழமை (26) காலை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுவதைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் கூடியிருக்கும் இடங்கள் நேற்று (25) மட்டக்களப்பு மாநகரசபை சுகாதாரப் பிரிவினரால் கிருமி நீக்கம் செய்யப்பட்டன.

மட்டக்களப்பு சுகாார வைத்திய அதிகாரி வைத்தியர் கே. கிரிசுதனின் வழிகாட்டுதலில், பொதுப் பேருந்து நிலையம், தனியார் பேருந்து நிலையம், காந்தி பூங்கா ஆகியவை சுகாதாரத் துறையின் ஊழியர்களால் கழுவப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்டன. மற்றும் தீயணைப்புத் துறை ஊழியர்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், குப்பைகளை சுத்தம் செய்யும் குழுவினர் தங்கள் வழக்கமான கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here