10 வருடங்களின் முன் காணாமல் போன எஃப்.பி.ஐ முகவர் ஈரான் சிறையில் மரணமானதாக குடும்பத்தினர் தகவல்!

கைது செய்யப்பட்டபோது (மத்தி), கைது செய்யப்படும் முன்னரும், கைதான 5 வருடங்களின் பின் எப்படியிருந்திருப்பார் என்பதையும் சித்தரித்து எஃப்.பி.ஐ வெளியிட்ட அறிவிப்பு

சுமார் 10 வருடங்களின் முன்பாக காணாமல் போன, அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ முகவர் ரொபர்ட் லெவின்சன் ஈரானிய சிறைச்சாலையில் இறந்துவிட்டார் என்று அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது என்று அவரது குடும்பத்தினர் புதன்கிழமை தெரிவித்தனர்.

லெவின்சன் எப்படி அல்லது எப்போது இறந்தார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. அவர்கள் இறந்துவிட்டதாக அமெரிக்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

2007 மார்ச் 9, அன்று லெவின்சன் காணாமல் போனார். ஈரானிய தீவான கிஷிலில் சில தகவல் மூலங்களை அவர் சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தார். இதன்போது, அவரும், அவரை சந்தித்தவர்களும் காணாமல் போயினர்.

லெவின்சன் ஒரு தனியார் புலனாய்வு அமைப்பின் விசாரணையில் சுயாதீனமாக செயல்பட்டார் என பல ஆண்டுகளாக, அமெரிக்க அதிகாரிகள் கூறி வந்தனர். ஆனால் 2013 அசோசியேட்டட் பிரஸ் விசாரணையில், லெவின்சன் சிஐஏ ஆய்வாளர்களால் ஒரு பணிக்கு அனுப்பப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

2010 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2011 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் அவரது சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் குடும்பத்தினர் பெற்றனர். ஆனால் அவர் இருக்குமிடமோ, வாழ்க்கை நிலையோ அறிய வரவில்லை.

ஈரானில் உளவுப்பணியில் ஈடுபட்டபோது அவர் கைதாகி, ஈரானிய புரட்சிகர நீதிமன்றத்தில் வழக்கை அவர் எதிர்கொள்வதாக ஈரான் பின்னர் தெரிவித்திருந்தது. எனினும், அதன் பின்னர் எந்த தகவலும் இல்லை.

தற்போது குடும்பத்தினரின் அறிக்கை வெளியாகியுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here