கொரோனா அச்சத்தால் ஊர் மக்களால் விரட்டியடிக்கப்பட்டு காட்டுக்குள் 4 நாள் தங்கிருந்த வெளிநாட்டு ஜோடி!

தங்குவதற்கு இடமில்லாமல் நான்கு நாட்கள் காட்டிற்குள் தங்கியிருந்த வெளிநாட்டு ஜோடியொன்றை பொலிசார் இன்று மீட்டனர்.

பண்டாரவளை, எல்ல பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

அங்குள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்த வெளிநாட்டு ஜோடியொன்று, திடீரென அங்கிருந்து விரட்டப்பட்டனர். கொரோனா அச்சம் காரணமாக விடுதி முகாமையாளர் மற்றும் சிலரால் அவர்கள் விரட்டப்பட்டனர்.

வெளிநாட்டினர் மூலம் கொரோனா பரவுவதாக அங்குள்ளவர்கள் கருதுவதால் அந்த ஜோடியால் வேறு விடுதியொன்றை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

அந்த ஜோடி காட்டில் தங்கியிருந்த தகவலறிந்த பொலிசார் அவர்களை மீட்டெடுத்தனர்.

உடனடியாக, தனியார் நிலமொன்றில் கூடாரம் அமைக்கப்பட்டு, அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

பின்னர் பொலிசார் அவர்களுக்கு பொருத்தமான தங்குமிடம் வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here