நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்!

கூட்டுறவு திணைக்களத்தினால் ‘அபி எனதுரு கெதர இன்ன’ அதாவது ‘நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களை வீட்டுக்கு வீடு சென்று விற்பனை செய்யும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் நேற்று (25) முன்னெடுக்கப்பட்டதாக அரசாங்க தகவல் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ வெளியிட்டள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

‘அபி எனதுரு கெதர இன்ன’ – (நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்) என்ற வேலைத்திட்டம் நேற்று (25) மேல்மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது

கூட்டுறவு திணைக்களத்தினால் ‘அபி எனதுரு கெதர இன்ன’ அதாவது ‘நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களை வீட்டுக்கு வீடு சென்று விற்பனை செய்யும் வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் இன்றைய தினம் (25) நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ரூபா 500 மற்றும் 1000 ரூபா பெறுமதியைக் கொண்ட உலர் உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய பொருட்கள் அடங்கிய பொதி பொதுமக்களுக்கு வழங்கப்படுவதுடன் தேவையான பொருட்கள் அடங்கிய பொதி தொலைபேசியின் மூலம் அறிவிப்பதனூடாக வீடுகளுக்கு கொண்டு வருவதற்கான நடைமுறையொன்றும் வகுக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர் மூலம் கிராம உத்தியோகத்தரகள் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை வலுவுடன் முன்னெடுப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் மேல் மாகாணத்தில் உள்ள 38 பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படுவதாக மேல்மாகாண ஆளுநர் திருமதி ருவினி ஏ விஜேவிக்ரம அவர்கள் தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டம் தொடர்பான வரையறுக்கப்பட்ட ஹோமாகம பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தினால் இன்றைய தினம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here