போதகரின் ஆராதனையில் கலந்துகொண்ட ஒருவர் குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

யாழ்.அரியாலையில் சுவிட்சர்லாந்து போதகரால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்துகொண்ட போதகர் ஒருவர் குடும்பத்தாருடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

திருகோணமலை – உப்புவௌி, பள்ளத்தோட்டம் பகுதியில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.பிரேமாநந்தன் தெரிவித்துள்ளார்.

போதகருடன் அவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த போதகர் நேற்றிரவு அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அவர் தற்போது வரை உடல்நலத்துடன் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அரியாலையிலிருந்து திரும்பியதும் இவருடன் தொடர்புகளைப் பேணியவர்கள் தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here