கொரோனாவினால் மீண்டும் இணைந்த விவாகரத்தான நட்சத்திர தம்பதி!


விவாகரத்து பெற்ற நட்சத்திர தம்பதி, கொரோனா வைரஸ் காரணமாக மீண்டும் இணைந்து வாழவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஃபேஷன் டிசைனரான சுசன்னேவை 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்தார் பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உண்டு.

கருத்து வேறுபாடு காரணமாக 2013 முதல் இருவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தார்கள். 2014 இல் விவாகரத்து பெற்றார்கள்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் இவர்கள் இருவரையும் மீண்டும் இணைத்துள்ளது.

கொரோனா வைரஸால் உலகம் முழுக்க 19,000 மக்கள் இறந்துள்ளார்கள். கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கொரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2 வது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா்.

இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக மகன்களின் நலனுக்காக தற்போது ஹிருத்திக் வீட்டில் வசித்து வருகிறார் சுசன்னே. இரு குழந்தைகளும் ஹிருத்திக்கிடம் வசித்து வருகிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனது மகன்கள் வீட்டில் தனிமையை உணரக்கூடாது என்பதற்காக ஹிருத்திக்கின் வீட்டுக்கு வந்து மகன்களுக்குத் துணையாக உள்ளார் சுசன்னே. இதை இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டு, சுசன்னேவுக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார் ஹிருத்திக். வீட்டில் இருக்கும் சுசன்னேவின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here