வவுனியாவில் பரவலாக சுத்தப்படுத்தல், கிருமி நீக்க நடவடிக்கை!

வவுனியாவில் பரவலாக தொற்று நீக்கல் மருந்து விசிறப்பட்டு வருகின்றது.
வவுனியா நகர்ப்பகுதியில் பொலிஸாரும் நெளுக்குளம் பகுதியில் வவுனிய தெற்கு தமிழ் பிரதேச சபையினரும் வாகனங்கள் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில் மருந்து விசிறும் செயற்பாட்டை இன்று முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தலைவர் து. நடராஜசிங்கத்தின் நேரடிக்கண்காணிப்பில் வாகனங்களுக்கு தொற்றுநீககி மருந்து விசிறும் செயற்பாட்டை நெளுக்குளம் பகுதியில் பிரதேசசபை தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் வவுனியா நகர்ப்பகுதியில் அதிகளவான மக்கள் இன்று காலையில் இருந்து குழுமியிருந்தமையினால் நகர்ப்பகுதியில் பொருட்களை கொள்வனவு செய்வதில் வர்த்தக நிலையங்களில் மக்கள் முண்டியடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வவுனியா நகரசபை தலைவரின் உத்தரவுக்கமைய வவுனியா நகரம் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது. ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நேற்று தொடக்கம்,  வவுனியா நகர சபை தவிசாளர் கெளதமன் அவர்களின் நேரடி வழிகாட்டலில் நகரை சுத்திகரிக்கும் செயற்பாடு இடம் பெற்றுள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகள் நகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்களால் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here