குழந்தைகளை கூண்டில் அடைத்து விட்டு வேலைக்கு போன பெற்றோர் கைது!

பிரேசிலில் ஒரு வீட்டில் மூன்று வயதுள்ள இரட்டைக் குழந்தைகளை மரக்கூண்டில் அடைத்து வைத்திருந்ததைக் கண்ட ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்தார்.

பொலிசார் அந்தப் பெற்றோர்களை விசாரித்தபோது அவர்கள் கூறிய பதிலைக் கேட்டால் கோபம் வாராதவர்களுக்கும் கூட கோபம் வரும்.

எப்ரெர்சின்டியா எனும் இடத்தில் வசிக்கும் அந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்போதும் அப்படி தான் அடைத்து வைப்பது வழக்கம் என்று கூறியுள்ளனர்.

அவர்கள் வேலைக்கு போகும் போது குழந்தைகளை கூண்டுக்குள் அடைத்து விட்டு சென்று விடுவார்கள். கூண்டில் அடைக்கப்பட்ட குழந்தைகளின்
புகைப்படம் ஒன்றில் அந்தக் குழந்தைகள் கூண்டிலுள்ள இடைவெளி வழியாக பரிதாபமாக எட்டிப் பார்க்கும் காட்சியைக் காண முடிந்தது. இது பிரேசிலிய மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தைகளைத் துன்புறுத்தியதாக சந்தேகத்தின் பேரின் அந்த பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளுர் அரசு காப்பகம் ஒன்றில் அனுமதிக்கப் பட்டுள்ளார்கள். அந்தப் பெற்ரோர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சமூக ஊடகங்களில் மக்கள் கோபத்துடன் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here