மாணவனிற்கு நிர்வாண படம் அனுப்பிய ஆசிரியை கைது!

அமெரிக்காவில் ஆசிரியை ஒருவர், மாணவன் ஒருவனுடன் நெருக்கமாக இருந்த காரணத்தினால் தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பியதற்காக பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியை கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் ஈவிங் மேல்நிலைப்பள்ளியில், மாற்று ஆசிரியராக செல்ஷியா ஹான் என்ற ஆசிரியை கடந்த 2017 ஆம் ஆண்டு அப்பள்ளியில் பணியாற்ற வந்துள்ளார்.

வருடத்திற்கு 48,850 டொலர் சம்பாதித்து வந்த அவர், பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவன் ஒருவனுடன் மிக நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
வகுப்பறையில் அந்த சிறுவனுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்ததுடன் தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்பி மாணவனை தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

இதன் காரணமாக, பொலிசார் செல்ஷியா ஹான் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக ஈவிங் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் எட்வார்ட் கூறியுள்ளார்.

மேலும் இது பள்ளிக்கு ஒரு அவமானம் எனவும் விசாரணைக்கு தாங்கள் சரியாக ஒத்துழைப்பு தருவோம் என்று பொலிசாருக்கு உறுதி அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார். மாணவனின்  நலன் கருதி பொலிசார், அவனின் பெயரை தெரிவிக்கவில்லை என்று  உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here