‘கொரோனா வைரஸ் காற்றில் பரவாது’

‘கொரோனா வைரஸ் காற்றில் பரவாது; ஒருவரிடமிருந்து வெளியேறும் நீர்த்துளிகள் வாயிலாக மட்டுமே பரவும்’ என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் பால்ராம் பார்கவா கூறியதாவது: கொரோனா வைரஸ் காற்றில் பரவாது; ஒருவரிடமிருந்து வெளியேறும் நீர்த்துளிகள் வாயிலாக மட்டுமே பரவும். இந்தியாவில் இதுவரை 17 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன. தினமும் 10 ஆயிரம்; வாரத்திற்கு 70 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகளை எடுத்து கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தும் திறன் நம்மிடம் உள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 சதவீதம் பேருக்கு ஆதரவான சிகிச்சையும் சில நேரங்களில் புதிய மருந்துகளும் வழங்கப்படுகின்றன. நோய் பரவும் சங்கிலியை உடைக்க வெளிநாட்டில் இருந்து வரும் மக்களை தனிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here