மஹிந்தவின் ‘சூழ்ச்சியிலிருந்து’ சு.க மீள வேண்டும்: சந்திரிக்கா

எக்காரணம் கொண்டும் ஸ்ரீலசுகட்சி அரசை விட்டு விலகக் கூடாது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கூட்டாட்சியை இடையில் கை விட முடியாது என தெரிவித்துள்ளார்.

நேற்றைய மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வைத்து அரசை விட்டு சு.க விலக வேண்டும் என அநுர பிரியதர்சன யாப்பா முன் வைத்த கருத்தை மறுதலித்தே சந்திரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் சூழ்ச்சி வலைக்குள் சு.க வீழ்ந்திருப்பதால் அதிலிருந்து மீண்டு வருவதே அவசியம் எனவும் உள்ளூராட்சித் தேர்தல் தோல்விக்கு கட்சியின் கொள்கையும் நிலைப்பாடும் உறுப்பினர்களுமே காரணம் எனவும் சந்திரிக்கா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here