இந்தவார ராசிபலன் (22.3.2020- 28.3.2020)

குரு, ராகு, சுக்கிரன், சந்திரனால் நன்மை ஏற்படும். புத்துணர்வுடன் செயல்களில் ஈடுபடுவீர்கள்.

பணிகளில் நல்ல முன்னேற்றம் உருவாகும். புதியவர்களின் அன்பு, பாசம் கிடைக்கும். உடன்பிறந்தவர் அன்பு பாராட்டுவர். வெளியூர் பயணத்தால் புதிய அனுபவத்தை பெறுவீர்கள். பிள்ளைகள் பெற்றோர் கூறும் அறிவுரையை ஏற்றுக் கொள்வர். சீரான ஓய்வு ஆரோக்கியத்தை பாதுகாக்கும். மனைவியின் பேச்சு, செயல் குடும்ப ஒற்றுமையை வளர்க்கும். நிலுவைப் பணம் வசூலாகும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணியாளர்கள் மனநிறைவுடன் பணிபுரிவர். பெண்களுக்கு தாய்வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் புதுப்புது விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவர்.
பரிகாரம் : சிவன் வழிபாடு சகல வளம் தரும்.

சூரியன், புதன், சுக்கிரன், சந்திரன் தாராள நன்மைகளை வழங்குவர். மனதில் புதிய உத்வேகம் பிறக்கும்.

செயல்களில் இருந்த தாமதம் விலகும். தாயின் அன்பு, ஆசியை பெறுவீர்கள். நிலுவைப் பணம் வரவாகும். எதிரியால் உருவான தொல்லை மறையும். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். மனைவியின் அறிவார்ந்த செயல் குடும்ப நலன் சிறக்க உதவும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். அரசு வகையில் உதவி பெற புதியவரின் உதவி கிடைக்கும். பணியாளர்கள் பணி இலக்கை அக்கறையுடன் நிறைவேற்றுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வர். மாணவர்கள் படிப்பில் முன்னேறி நண்பருக்கும் உதவுவர்.
பரிகாரம் : முருகன் வழிபாடு தைரியம் வளர்க்கும்.

சூரியன், குரு, சுக்கிரன், சந்திரன் அனுகூல பலனை தருவர். நேர்மை வழியில் செயல்படுவீர்கள்.

அக்கம் பக்கத்தவர் அன்பு பாராட்டுவர். குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்திருக்கும். வாகனத்தின் பயன்பாடு அளவுடன் இருக்கும். பிள்ளைகள் அறிவாற்றல், செயல்திறனில் மேம்பட உதவுவீர்கள். ஒவ்வாத உணவை உண்ண வேண்டாம். மனைவியின் மனதில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணியை மேற்கொள்வீர்கள். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். பணியாளர்களுக்கு பணியிடத்தில் சாதகமான சூழல் நிலவும். மாணவர்கள் படிப்பில் முன்னேற புதிய யுக்திகளை பின்பற்றுவர்.
பரிகாரம் : குரு வழிபாடு மங்கள வாழ்வு தரும்.

புதன், சனீஸ்வரர், கேது அதிர்ஷ்டகர பலன்களை தருவர். பழகுபவர்களின் மனம் அறிந்து பேசுவீர்கள்.

தாய்வழி உறவினர்களின் செயலை குறை சொல்ல வேண்டாம். வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும். பிள்ளைகளின் எதிர்கால நலன் சிறக்க தேவையானதை செய்வீர்கள். பூர்வ சொத்தில் அளவான பணவரவு கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவி வழி சார்ந்த உறவினர்களின் உதவிகளை பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளர அதிக கவனம் கொள்வீர்கள். பணியாளர்கள் பணி இலக்கை ஆர்வமுடன் நிறைவேற்றுவர். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவர். மாணவர்கள் பாதுகாப்பற்ற இடங்களில் செல்லக் கூடாது.
சந்திராஷ்டமம் : 22.3.2020 காலை 6:00 – 23.3.2020 இரவு 7:27 மணி
பரிகாரம் : துர்கை வழிபாடு துன்பம் போக்கும்.

செவ்வாய், சுக்கிரன், ராகு, குரு அனுகூல அமர்வில் உள்ளனர். மனதில் தைரியம் பிறக்கும். தம்பி, தங்கையின் அன்பை பெறுவீர்கள். வெளியூர் பயணத்தால் இனிய அனுபம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பி கேட்டதை வாங்கித் தருவீர்கள். இஷ்ட தெய்வ அருள் துணை நிற்கும். உறவினர் வீட்டு விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். கடன் தொந்தரவு பெருமளவில் குறையும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். மனைவியின் அன்பு, பாசம் நெகிழ்ச்சியை தரும். பணியாளர்கள் புதிய தொழில் நுட்பத்தை அறிந்து கொள்வர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவர். மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சி காண்பர்.

சந்திராஷ்டமம் : 23.3.2020 இரவு 7:28 – 26.3.2020 காலை 7:09 மணி
பரிகாரம் : பைரவர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

சுக்கிரன், புதன், சந்திரன் கூடுதல் நற்பலன்களை தருவர். சிறிய செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள்.

இஷ்ட தெய்வ அருளால் புதிய திட்டம் நிறைவேறும். சமூகத்தில் உங்களின் மீதான மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பூர்வ சொத்தில் கூடுதல் பணவரவு கிடைக்கும். எதிர்ப்பாளர் சொந்த சிரமங்களால் விலகுவர். மனைவியின் ஆலோசனை வாழ்வில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப் பணியை மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் திறமை மிகுந்த செயலால் பாராட்டைப் பெறுவீர்கள். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்றுக் கொள்வர். பெண்கள் புத்தாடை, நகை வாங்கி மகிழ்வர். மாணவர்கள் அக்கறையுடன் படித்து நற்பெயர் பெறுவர்.
சந்திராஷ்டமம் : 26.3.2020 காலை 7:10 – 28.3.2020 மாலை 5:51 மணி
பரிகாரம் : அனுமன் வழிபாடு செல்வ வளம் தரும்.

சூரியன், சனீஸ்வரர், கேது, அனுகூல பலனை தருவர். புதிய வாய்ப்புக்களை பயன்படுத்துவதால் பணவரவு அதிகரிக்கும்.
உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வர். வாகனப் பயன்பாடு அளவுடன் இருக்கும். பிள்ளைகள் தங்களின் கவனக் குறைவால் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடலாம். கடன் தொந்தரவு குறையும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியம் தரும். மனைவியின் மனதில் நம்பிக்கை வளர உதவுவீர்கள். தொழில், வியாபாரம் வளர கூடுதலாக பணிபுரிவது அவசியம். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டம் தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள் செலவில் சிக்கனத்தை பின்பற்றுவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளையும் ஆர்வமாக பயில்வர்.
சந்திராஷ்டமம் : 28.3.2020 மாலை 5:52 – நாள் முழுவதும்
பரிகாரம் : ஐயப்பன் வழிபாடு வெற்றி அளிக்கும்.

செவ்வாய், புதன், குரு, சந்திரன் தாராள நற்பலன்களை வழங்குவர். உத்வேகமுடன் செயல்படுவீர்கள்.

முக்கியமான பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். சமூக நிகழ்வு இனிய அனுபவம் தரும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகள் பெற்றோரின் வழிகாட்டுதல்படி நடப்பர். வீட்டில் ஒற்றுமை, மகிழ்ச்சி நிலைத்திருக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் செயல்கள் குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்க சில மாற்றத்தை செய்வீர்கள். பணியாளர்கள் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவர். பெண்கள் பணம் சேமிப்பதில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர்.

சந்திரன், சுக்கிரனால் நன்மை கிடைக்கும். பேச்சில் நிதானம் தேவை. கூடுதல் முயற்சியால் பணிகள் நிறைவேறும்.

உடன்பிறந்தவர் எதிர்பார்ப்புடன் உங்களை அணுகுவர். வாகனத்தில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பு, வேலையில் முன்னேறுவர். விவகாரங்களில் இருந்த நெருக்குதல் குறையும். மனைவியின் ஆர்வமிகு செயலை குறை சொல்ல வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சில புதிய மாற்றத்தை செய்வீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் பிறருக்காக பணப் பொறுப்பை ஏற்க வேண்டாம். மாணவர்கள் படிப்பு தவிர பிறவற்றில் ஆர்வத்தை குறைப்பது நல்லது.
பரிகாரம் : அம்பிகை வழிபாடு சகல நன்மை தரும்.

சூரியன், சுக்கிரன், ராகு, சந்திரனால் அளப்பரிய நன்மை கிடைக்கும். உறவினர்களின் எதிர்பாராத உதவி ஊக்கம் தரும்.

சமூகத்தில் உங்களுக்கான அந்தஸ்து கூடும். வாகனப் பயன்பாடு திருப்திகரமாகும். பிள்ளைகள் சில விஷயங்களில் பிடிவாதம் கொள்வர். பூர்வ சொத்தில் பணவரவு அதிகரிக்கும். நோய் தொந்தரவு குறையும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் பெருந்தன்மை குணம் மனதிற்கு மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து லாபம் கூடும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத் திறன் வளரும்.
பரிகாரம் : பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

குரு, சனீஸ்வரர், கேது, சுக்கிரன் அதிர்ஷ்டகர பலன்களை வழங்குவர். மனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை விலகும்.

சமூக நடப்பில் புதிய அனுபவம் பெறுவீர்கள். பேச்சில் வசீகரம் வெளிப்படும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். வாகனத்தின் பயன்பாடு சீராகும். பிள்ளைகள் அறிவு, செயல் திறனில் மேம்பட சில வழிகாட்டுதல் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். கடன் தொந்தரவு பெருமளவில் குறையும். மனைவி குடும்ப நலனில் அக்கறை கொள்வார். தொழில், வியாபாரத்தில் உள்ள போட்டியை சமயோசிதமாக எதிர்கொள்வீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறையுடன் ஈடுபடுவர்.
பரிகாரம் : மீனாட்சி வழிபாடு சுபவாழ்வு தரும்.

செவ்வாய், சுக்கிரன், சந்திரன் நற்பலன் வழங்குவர். முன்னேற்றப் பாதையில் நடைபோடுவீர்கள்.

இகழ்ந்து பேசுபவரிடம் விலகியிருங்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகள் பெற்றோரின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படுவர். குடும்பத்திற்கான செலவில் சிக்கனம் நல்லது. நோய் தொந்தரவு குறைய மருத்துவ சிகிச்சை நல்ல பலன் தரும். மனைவி வழி சார்ந்த உறவினர்களிடம் விவாதம் பேச வேண்டாம். தொழிலில் புதிய யுக்தியால் உற்பத்தி, விற்பனை சீராகும். பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறையை தவறாமல் பின்பற்றவும். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற புதிய பயிற்சிகளை மேற்கொள்வர்.
பரிகாரம் : விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here