Uber Eats அல்ல… இது Boober Eats: கொரோனாவினால் முடங்கியவர்களிற்கு நிர்வாண அழகிகள் ஆரம்பித்து கல்லா கட்டும் ஹோம் டெலிவரி!

உலகமே ரணகளத்தில் இருக்கும்போது ஒரு பலே கில்லாடி, கிளுகிளுப்பு ஐடியா மூலமாக பணமீட்ட ஆரம்பித்திருக்கிறார்.

ஊபர் ஈட்ஸ் (uber eats) என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்கள் இருப்பிடத்திலிருந்தே, உணவை ஓர்டர் செய்து, வரவழைத்துக் கொள்ளலாம். இப்பொழுது பூபர் ஈட்ஸ் (Boober Eats) என்ற பெயரில், உணவு வழங்கும் சேவையை ஒருவர் ஆரம்பித்துள்ளார்.

பெண்களின் அங்கத்தை குறிக்கும் பெயரை பார்த்தபோதே, இது எக்கச்சக்க ஐடியா என்பது உங்களிற்கு புரிந்திருக்கும்.

ஆம்.

தற்போது கொரோனா பரவி வருகிறது. இதனால் பெரும்பாலான நாடுகளில் மக்கள் கூடும் பொது இடங்கள் மூடப்பட்டு வருகிறது. அழகிகள் நிர்வாணமாக நடனமாடும் கிளப்புகளும் (Strip club) இதற்கு விதிவிலக்கல்ல. அமெரிக்காவிலும் இந்தவகை கிளப்புக்கள் மூடப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவின், ஓரிகானில் உள்ள லக்கி டெவில் லவுஞ்சில் என்ற இந்தவகை கிளப் ஒன்று மூடப்பட்ட பின்னர், அழகிகளை வைத்து என்ன செய்வதென யோசித்த முதலாளி ஷான் போல்டன் இந்த ஐடியாவை உருவாக்கியுள்ளார்.

இதுவரை கிளப்பிற்குள் நிர்வாணமாக நடனமாடிய அழகிகளை வைத்து, நிர்வாணமாக உணவு வழங்கல் சேவை ஆரம்பித்தால் என்ன என அவர் யோசித்து, அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளார்.

வீடுகளில் முடங்கியிருப்பவர்கள், கொரொனாவினால் சுயதனிமையிருப்பவர்கள் அனைவருக்குமான சேவையாக இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளப்பின் உரிமையாளரான ஷான் போல்டன் முதலில் இந்த யோசனையை பேஸ்புக்கில் நகைச்சுவையாக முன்வைத்தார். ஆனால் பலரும் அதை விரும்பி, இணையத்தில் ஓர்டர் செய்ததால், இந்த வியாபாரத்தை தொடங்க முடிவு செய்தார். ‘நான் முதலில் இதை நகைச்சுவையாக பதிவிட்டேன். பேஸ்புக்கில் 150 பேர் இதை பகிர்ந்தனர். இதற்கு கிடைத்த வரவேற்பையடுத்து உற்சாகமாக ஆரம்பித்தேன். இப்போது பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறோம்“ என அவர் கூறினார்.

பியர், ரெட் புல் மற்றும் இதர மதுபானங்களை மட்டுமல்லாமல், லக்கி டெவில் லஞ்ச் ஒரு முழுமையான மெனுவை வழங்குகிறது. மதிய உணவுகளும் இதில் உள்ளன. ஒரு ஓர்டர் வழங்கப்பட்டவுடன், இரண்டு நடன அழகிகள் அதை விநியோகிக்க நியமிக்கப்படுகிறார்கள். நோய் பரவுவதைத் தடுக்க பாதுகாப்பான நடவடிக்கைகளுடன், உணவை வாடிக்கையாளரின் வீட்டுக்கு கொண்டு வருகிறார்கள். பாதுகாப்பான தூரத்தில் வாடிக்கையாளரை அணுகுகிறார்கள். ஒரு வாடிகையாளரிடம் உணவை வழங்கி விட்டு, குறுகிய நடன அசைவுகளை அவர்கள் நிகழ்த்துவார்கள்.

நடன அழகிகள் குட்டைக் காற்சட்டை, பாஸ்டீஸ் (மார்புகளை மறைக்க அணிவது) அணிந்து உணவு விநியோகிக்கிறார்கள்.

கொரோனாவினால் வீடுகளிற்குள் முடங்கியுள்ள அந்த பகுதி குசும்பர்கள் பலர், லக்கி டெவில் லவுஞ்சில் ஓர்டர் செய்து விட்டு, வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார்களாம்!

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here