கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் இரசாயன பொருட்களை கண்டறிந்த சூப்பர் கணிணி


கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று உலகம் முழுக்க பல நாடுகள் கடுமையான முயற்சியை செய்து வருகின்றன. கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஜேர்மனி ஆகிய நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இதில் அமெரிக்கா ஏறத்தாழ வெற்றி கண்டுள்ளது.

கொரோனா வைரஸ்  விஞ்ஞானிகளுக்கு  பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. இவ் வைரஸ் பரவுகின்ற வேகத்தை பார்த்தால் விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சியை மேலும் துரிதப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளார்கள்.

இந் நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த சம்மிட் சூப்பர் கணிணி  கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கக்கூடிய  இரசாயனப் பொருட்களை கண்டறிந்துள்ளது. எந்த மருந்து கலவைகள் ஹோஸ்ட் செல்களைப் (Host Cell) பாதிக்காமல் வைரஸை திறம்பட தடுக்கக்கூடும் என்பதை பகுப்பாய்வு செய்துள்ளது.

உலகிலிருக்கும் எல்லா இரசாயனங்களையும் இந்த சம்மிட் சூப்பர் கணிணி சோதனை செய்து வருகிறது. அனைத்து இரசாயனப் பொருட்களையும் இந்த சம்மிட் சூப்பர் கணிணி  சோதனை செய்து, அதை ஒன்றுடன் ஒன்று சேர்த்து மருந்துகளை உருவாக்கி பார்க்கும். இதை வைத்து பல மில்லியன் இரசாயனப் பொருட்களை உருவாக்கும். அதன்பின்  இந்த இரசாயனப் பொருட்களில் எது கொரோனா வைரஸை கட்டுபடுத்தும்  என்று சோதனை செய்யும்.

தற்போது இதன் மூலம் மொத்தம் 77 இரசாயனப் பொருள் கலவைகளை இந்த சம்மிட் சூப்பர் கணிணி  கண்டுபிடித்துள்ளது. இதை பயன்படுத்தினால் இந்த வைரஸை தடுக்க  வாய்ப்புள்ளது என்று இதன் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இதை விரைவில் நிஜமாக சோதனை செய்து அதன்பின் மனிதர்களிடம் சோதனை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த இந்த சம்மிட் சூப்பர் கணிணி  IBM நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். இதுதான் தற்போது உலகில் இருப்பதிலேயே மிகவும் வேகமான கம்ப்யூட்டர்  ஆகும். இந்த கம்ப்யூட்டர்   கடந்த 2018ம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்த நிலையில் துப்பாக்கியிலிருந்து வெளியாகும் தோட்டாவை விட இந்த கம்ப்யூட்டர் வேகமாக செயல்படும் என கூறப்படுகிறது.

ஒரே நொடியில் இந்த கம்ப்யூட்டர்   200,000 Trillion கணக்குகளை சோதனை செய்ய முடியும். இந்த மொத்த கணக்குகளை ஒரு மனிதர் தனியாக செய்ய வேண்டும் என்றால் 630 கோடி வருடங்கள் எடுக்கும்.  ஒரு சாதாரண மேசை கணினியில் சேமிக்கப்பட்டுள்ள 30 வருட தரவுகளை ஒரு மணி நேரத்தில் கணக்கீடு செய்யும் திறனுடைய கணணி. அமெரிக்காவில் சம்மிட் சூப்பர் கணணியால் வானிலை, பெளதிகவியல், உயிரியல் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சிகளுக்கும் இக் கணணி பயன்படுத்தப்படுகிறது.

உலகில் இதைவிட வேகமான கணிணி  அதன்பின் கண்டுபிடிக்கப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here