ஜெர்மனிய வீரர்கள் 2.5 மில்­லி­யன் யூரோ நன்கொடை

கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போருக்­குக் கைகொடுக்கும் வித­மாக ஜெர்மனிய தேசிய காற்­பந்து அணி வீரர்கள் 2.5 மில்­லி­யன் யூரோ நன்­கொடை வழங்க­வுள்­ள­னர்.

“இது­போன்­ற­தொரு நேரத்­தில்­தான் நாம் ஒரு­வரை ஒரு­வர் பார்த்துக்­ கொள்­ள­ வேண்டும். தேசிய அணி வீரர்­க­ளான நாங்களும் அது­கு­றித்தே சிந்­தித்து வரு­கி­றோம். நல்­ல­தொரு செயலுக்­காக நன்­கொடை வழங்­கு­கி­றோம்,” என்று ஜெர்­மனிய அணித்தலை­வர் மனு­வல் நூயர் தெரி­வித்­துள்­ளார்.

அத்­து­டன், தொண்­டூ­ழி­யத்­தில் ஈடு­ப­டும்­படி தங்­க­ளின் ரசிகர்களையும் ஜெர்­ம­னிய காற்­பந்து வீரர்­கள் கேட்­டுக் ­ கொண்டுள்­ள­னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here