பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு!

பாண் தவிர்ந்த வெதுப்பக உற்பத்தி உணவுப் பண்டங்கள் 5 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த விலை மாற்றம் வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என சங்கம் குறிப்பிட்டுள்ளது.

‘எரிபொருள்களின் விலை உயர்வையடுத்து வெதுப்பக உற்பத்தி உணவுப் பண்டங்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் இன்று கூடி ஆராய்ந்தது.

இந்த நிலையில் நாளாந்தம் வருமானம் ஈட்டும் குடும்பங்கள் பாதிப்படையாத வகையில் பாணின் விலையை அதிகரிப்பது இல்லை எனத் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் வெதுப்பக உரிமையாளர்களைப் பாதிக்காத வகையில் பணிஸ், கறி பணிஸ் உள்ளிட்டவையின் விலைகளை 5 ரூபாவால் அதிகரிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது’ என்று வெதுப்பக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here