வவுனியா மாவட்ட செயலகத்தில் இஸ்லாமிய தொழுகை அறை அமைக்க முயற்சி!

வவுனியா மாவட்ட செயலகத்தில் இஸ்லாமிய தொழுகை அறை ஒன்றினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

வவுனியா மாவட்டத்தின் புதிய அரச அதிபராக இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஐ.எம்.ஹனீபா அவர்கள் கடந்த 6 ஆம் திகதி கடமைகளைப் பொறுப்பேற்றிருந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய உத்தியோகத்தர்களின் வழிபாட்டுக்கு என தனியான அறை ஒன்றினை அமைப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது.

இதேவேளை, முன்னைய அரச அதிபர் வவுனியாவிற்கு மாற்றலாகி வந்த போது பௌத்த வழிபாட்டுத் தலம் ஒன்றினை அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு அவை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு முடிவின் மூலம் தடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here