மாஸ்டரில் கல்லூரி பேராசிரியராக விஜய்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு என்ன கேரக்டர் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில், அவர் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார்.

அந்தப் படத்தில் அவருடைய பெயர் ஜான் துரைராஜ் என்றும், அவர் செயிண்ட் ஜெப்ரே கலை மற்றும் அறிவியல் கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணியில் இருப்பதோடு, மாணவர் நல அமைப்பின் முதல்வராகவும் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

மாஸ்டர் படத்தின் படபிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில சமீபத்தில் வெளியானது. அதை வைத்தே, விஜய் பட விவரங்களையும் பலர் வெளியிட்டு வருகின்றனர். முன்னதாக, மாஸ்டர் படம் கொரியன் படமான சைலன்ஸ்டு படத்தின் காப்பி என கூறப்பட்டது. அந்தப் படத்தில், கதாநாயகன் பள்ளிக் கூட ஆசிரியராக நடித்திருப்பார். மாஸ்டர் படத்தில், நாயகன் விஜய், கல்லூரி பேராசிரியராக நடித்திருக்கிறார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here