3 முறை கருக்கலைப்பு செய்தாரா பிரபல நடிகை?

பிரம்மன், மாயவன் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தெலுங்கு நடிகை லாவண்யா திரிபாதி. இந்நிலையில், பிரபலங்கள் மீது சர்ச்சையான கருத்துக்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தும் நடிகர் ஸ்ரீராமோஜு சுனிஷித், ஒரு பேட்டியில் லாவண்யா திரிபாதியை 2015ல் திருமணம் செய்ததாகவும், தன்னுடன் வாழ பிடிக்காமல் விவாகரத்து பெற்றதாகவும், மூன்று முறை கருகலைப்பு செய்ததாகவும் கூறி இருந்தார்.

‛‛மலிவான விளம்பரத்திற்காக தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய் தகவல்களை கூறிய சுனிஷித் மீது நடவடிக்கை எடுக்கும் சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார் லாவண்யா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here