தனிமைப்படுத்தப்பட்ட மிமி சக்கரவர்த்தி!


கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து முன்னெச்சரிக்கையாக அடுத்த ஏழு நாட்களுக்கு தனது வீட்டில் முழுமையாக தனிமைப்படுத்தப்படுவதாக பெங்காலி திரைப்பட நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான மிமி சக்கரவர்த்தி அறிவித்துள்ளார்.

பாஜி படப்பிடிப்புக்காக மிமி சக்ரபர்த்தி பிரிட்டன் சென்றிருந்தர். லண்டனிலிருந்து கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மிமி, வெப்ப பரிசோதனை மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான பிற பரிசோதனைகளை செய்துகொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மிமி, “நான் இங்கிலாந்திலிருந்து துபாய் வழியாக கொல்கத்தா வந்துள்ளேன். எனவே அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. என்னை வீட்டில் இருப்பவ்ர்கள் சந்திக்க வேண்டாம் என்று எனது பெற்றோரிடம் கேட்டுக்கொண்டேன். தொற்றுநோய் பரவாமல் தடுக்க அரசாங்கத்தின் வழிமுறைகளை அனைத்து மக்களும் பின்பற்றவேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

View this post on Instagram

vibes💪🏻💯

A post shared by Mimi (@mimichakraborty) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here