மட்டு தொழில் நுட்ப கல்லூரி வருடாந்த விளையாட்டு போட்டியும், பரிசளிப்பும்

மட்டு தொழில் நுட்ப கல்லூரி மாணவர் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட வருடாந்த விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களிற்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த இந்த நிகழ்வில் மாவட்ட அரசஅதிபர் மா.உதயகுமார் கலந்துகொண்டு மாணவர்களிற்கு சான்றிதழ்களும், கேடயமும் வழங்கி வைத்தார்.

இந்த விளையாட்டு போட்டிகளில் 26 பாடநெறிகளை பயிலும் மாணவர்கள் குழுக்களாக பங்கு பற்றினர். இதில் கரப்பந்தாட்டம், மென்பந்து கிரிக்கட் சுற்று போட்டி, வலைப்பந்தாட்டம் மற்றும் மரதன் உள்ளிட்ட விளையாட்டுக்கள் நடைபெற்றன.

இந்த நிகழ்வின் முழுமையான புகைப்பட அல்பத்தை பார்க்க இங்கு அழுத்துங்கள்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here