ஒருங்கிணைப்புகுழு கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறிய லிங்கநாதன்!

வவுனியா வடக்கு பிரதேச செயலாளரின் செயற்பாட்டில் அதிருப்தி அடைந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இருந்து இடைநடுவில் வெளியேறியுள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலக ஒருங்கினைப்பு குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் கூட்டத்தின் இடைநடுவில் வெளிநடப்பு செய்தார்.

இது தொடர்பாக வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தபோது- வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை செவிமடுப்பதாக தெரியவில்லை. தன்னிச்சையாகவே செயற்படுகின்றார். அத்துடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களுக்கு சரியான முறையில் அழைப்பு விடுக்கபடுவதில்லை. கிராமட்ட அமைப்புகளிற்கு கூட இன்றைய கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்தநிலையில் கிராமங்களில் காணப்படும் பிரச்சனைகளை எவ்வாறு அறிந்து கொள்ளமுடியும்.

அத்துடன், பிரதேச செயலாளர் ஒரு கட்சி சார்ந்து செயல்படுவதாகவே தெரிகிறது. அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்படுமாறு மாவட்ட ஒருங்கினைப்பு குழுவிலும் தீர்மானம் எடுக்கபட்டது. தீர்மானம் எடுத்த பின்பும் கூட நடைமுறைகளில் எந்த மாற்றமும் வரவில்லை. இதன்காரணமாகவே கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தேன். இது தொடர்பாக எதிர்வரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்களில் தீர்க்கமான முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்தார்

குறித்த கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ம.தியாகராஜா ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here