கிளிநொச்சியில் 5 நாளில் குழந்தை பிரசவித்த பெண்களின் விபரத்தை கோருகிறது ரிஐடி!

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 25ம் திகதி முதல் 30ம் திகதி வரையான காலப்பகுதியில் குழந்தை பிரசவித்தவர்களின் விபரங்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் கோரியுள்ளனர்.

கிளிநொச்சி பொது மருத்துவமனை, மற்றும் வீடுகளில் குழந்தை பிரசவித்தவர்களின் விபரங்களையே பொலிசார் கோரியுள்ளனர். எனினும் அதற்கான காரணத்தை பொலிசார் வெளிப்படுத்தவில்லை.

எனினும், கொழும்பு சுகாதார அமைச்சின் அனுமதியின்றி அதை வழங்க முடியாதென வடக்கு சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான விபரம் கொழும்பு சுகாதார அமைச்சின் செயலாளரிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் பதிலுக்காக வடக்கு சுகாதார அமைச்சின் அதிகாரிகள் காத்திருக்கிறார்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here