குகையில் இருந்து சிறுவர்கள் மீட்பு: வீடியோவை வெளியிட்டது தாய்லாந்து அரசு

தாய்லாந்தில்  தாம் லூங் குகையில் சிக்கிய  சிறுவர்களை மீட்ட வீடியோவை தாய்லாந்து கடற்படை வெளியிட்டுள்ளது. மேலும் மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

தாய்லாந்தின் வடக்குப் பகுதியில் மியான்மர் எல்லையை ஒட்டி உள்ளது தாம் லுவாங் குகை. சுமார் 10 கி.மீ. தூரமுள்ள இந்தக் குகைக்கு கடந்த மாதம் 23-ம் தேதி கால்பந்து அணியைச் சேர்ந்த 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் என 13 பேர் சாகச பயணம் மேற்கொண்டனர்.

இவர்கள் குகைக்குள் ஒரு கி.மீ. தூரம் சென்ற போது திடீரென பலத்த மழை பெய்தது. இதில் குகைக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் அதிர்ச்சி அடைந்த சிறுவர்களும் பயிற்சியாளரும் குகைக்கு உள்ளே மேலும் சிறிது தூரம் சென்று மேடான பாறை இடுக்கில் ஏறினர்.

வெள்ளம் சூழ்ந்ததால், அவர்களால் வெளியில் வர முடியவில்லை. குகைக்கு வெளியே அவர்கள் நிறுத்தியிருந்த சைக்கிள்களைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தாய்லாந்து, பிரிட்டன், இந்தியா உட்பட பல நாட்டு மீட்பு வல்லுநர்கள், முக்குளிப்பு வீரர்கள் அங்குக் குவிந்தனர். 18 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு குகையில் சிக்கிய சிறுவர்களும், அவர்களது பயிற்சியாளரும்  மீட்கப்பட்டனர்.

சிறுவர்களை மீட்ட மீட்புபணிக்கு குழுவுக்கு உலகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது. இந்த நிலையில் சிறுவர்களை முக்குளிப்பு வீரர்கள் மீட்ட வீடியோவை தாய்லாந்து கடற்படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும் சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சியும் வெளியிடப்பட்டுள்ளது.  அதில் முகமூடிகள் அணிந்து கேமராவை நோக்கி சிறுவர்கள் கை அசைக்கும் போட்டோவை தாய்லாந்து அரசு வெளியிட்டுள்ளது.

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here