ஒருமுறை தாம்பத்தியம் வைத்தாலே கருத்தரிக்குமா?: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்- 26

பெயர் குறிப்பிட விரும்பாத பெண் (21)
பாசையூர்

காதலனுடன் அண்மையில் ஒன்றாக தங்கியபோது, உடலுறவு வைத்துக் கொண்டோம். ஒரு மாதமாகிறது. எனக்கு கரு உருவாகியிருக்குமோ என்ற பயமாக உள்ளது. ஒரு முறை உடலுறவு வைத்துக் கொண்டாலும் கரு உருவாகுமா?

டாக்டர் ஞானப்பழம்: இந்த மாதிரி கேள்விகள் திருமணமான பெண்களுக்கு வழக்கமாக எழுவதுதான். திருமணமாகா விட்டாலும், விவரம் தெரிய தொடங்கியதும் பலருக்குள்ள பெரிய கேள்வியிது.

‘கன்சீவ்’ என்ற வார்த்தை லத்தீன் வார்த்தையில் இருந்து உருவானது. ‘கன்சிஃபையர்’ என்ற லத்தீன் வார்த்தைக்கு ஏற்றுக்கொள்ளுதல் என அர்த்தம். ஆணுடைய விதையில் இருந்து விந்து வெளியாதல் அல்லது பெண்ணின் கருப்பையில் கருமுட்டை வெளியாதல் என்பதைப் பொறுத்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரிப்புக் காலம் என்பது கருத்தரித்த நேரம் தொடங்கி, பிரசவ நேரம் வரை. இது, கரு உருவான அந்த மாதத்தின் மாதவிடாய் நாளில் தொடங்கி 280 நாட்களைக் குறிக்கும்.

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய்க்குப் பின் பெண்ணின் கருப்பையில் முட்டை உருவாகி, ஃபொலிக்கலில் தகுதி நிலையை அடைகிறது. மாதவிடாய் சுழற்சியின் நடுவில் ஃபொலிக்கல் உடைந்து, முட்டை விடுவிக்கப்படுகிறது. இதை, ‘ஓவலேஷன்’ என்கிறோம். மாதவிடாய் சுழற்சியின் 14 ஆம் நாளில் (மாதவிடாய் இரத்தப்போக்கு ஏற்பட்ட முதல் நாளில் இருந்து 14 ஆவது நாள்) கருப்பையின் உட்புற லைனிங் ஆன எண்டோமெட்ரியம் தடித்து, கருமுட்டையைச் சுமந்து, வளர்ப்பதற்குத் தயாராகி நிற்கிறது.

இந்த நிலையில் முட்டையானது பெண்ணின் பெரிடோனியல் குழியில் இருந்து, ஃபெலோப்பியன் குழாய் மூலமாக, கர்ப்பப்பையை அடைகிறது.

இந்தத் தருணத்தில் உடலுறவு நிகழ்ந்தால், முட்டையானது கருத்தரிப்பதற்கான அனைத்துச் சாத்தியங்களும் இருக்கும். உச்சநிலையின்போது, ஆணுறுப்பில் இருந்து 3 மி.லி அளவு வரை விந்து பீய்ச்சப்படுகிறது.

ஒவ்வொரு மி.லி விந்துவும் 15 மில்லியனுக்கு மேல் விந்தணுக்களைக் கொண்டிருக்கும். 1 முதல் 5 மணி நேரம் வரை இந்த விந்தணுக்கள் பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில் பயணிக்கின்றன. யோனியில் தொடங்கி ஃபெலோப்பியன் குழாய் வரையான இந்தப் பயணத்தின்போது, ஏராளமான விந்தணுக்கள் ஆற்றல் இழந்து போகின்றன. இறுதியில் 3,000 விந்தணுக்கள் மட்டுமே முட்டை இருக்கும் ஃபெலோப்பியன் குழாயை அடைகின்றன. அதில், சில நூறு விந்தணுக்கள்தான் முட்டையை அடைகின்றன. அதில், ஒரு விந்தணு மட்டுமே முட்டையைத் துளைத்து கருத்தரிக்கக் காரணமாகிறது.

உடலுறவின்போது கருத்தரிப்பதற்கான சாத்தியங்கள் என்னென்ன என்பதற்காக இதைச் சொன்னேன்.

ஒரே ஒருமுறை உறவுகொண்டாலும் கருத்தரிக்க வாய்ப்பு உள்ளதா என்பது பல பெண்களிற்கும், ஆண்களிற்கும் உள்ள குழப்பம்.

இதற்கு பதில்- வாய்ப்பு உண்டு. முட்டை தயார் நிலையில் இருந்து, விந்து சரியான தருணத்தில் செலுத்தப்பட்டால், கருத்தரிக்க 100 சதவிகித வாய்ப்பு உள்ளது. கருத்தரிப்பதற்கு பலமுறை உடலுறவுகொள்ள வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

கருத்தரிப்பதற்கு பெண்களிற்கு 25 வயது சரியானது. 35 வயதுக்குப் பின் பெண்கள் கருத்தரிப்பது, பாதிப்புடைய குழந்தைகள் பிறக்கவும் குழந்தையைப் பெற்றெடுப்பதில் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது.

எந்தெந்த நாட்களில் உறவுகொண்டால் கருத்தரிப்பதைத் தவிர்க்கலாம் என்பது, மாதவிடாய் சுழற்சியின் தொடர்ச்சியைப் பொறுத்தது. ஒரு பெண் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சிக்கு ஆட்படுகிறார் என வைத்துக்கொள்வோம். மாதவிடாய் ஆன நாளை, முதல் நாள் எனக் கணக்கிட வேண்டும். 9-ம் நாள் முதல் 18-ம் நாள் வரை கருத்தரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள நாட்கள் ஆகும். இதைச் சரியாகக் கணக்கிடுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. பெண்களுக்கு 28 நாட்கள் என்ற சுழற்சியில் மாதவிடாய் ஏற்படுவது இல்லை. 18-ம் நாள் கருத்தரிப்பு ஏற்பட்டால், அதை குறைந்தபட்ச சுழற்சி எனவும் 10-ம் நாள் கருத்தரித்தால், அதை அதிகபட்ச சுழற்சி எனவும் சொல்வோம்.”

பெயர் குறிப்பிட விரும்பாத பெண் (24)
திரப்பனை

எனக்குத் திருமணம் முடிந்து எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் கருத்தரிக்கவில்லை. உடலுறவுகொள்வதில் ஏதும் தவறு இருக்கிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. எந்த நிலையில் உடலுறவுகொள்வது கருத்தரிப்புக்கு ஏற்றது?”

டாக்டர் ஞானப்பழம்: பொதுவாக, பெண் கீழேயும் ஆண் மேலேயும் இருந்து உடலுறவு கொள்வதே போதுமானது. யோனி, படுக்கை வசத்தில் இருப்பதைவிடவும் சற்றே மேல் நோக்கி, சாய்ந்த நிலையில் இருப்பது கருத்தரிப்பு வாய்ப்பை அதிகரிக்கிறது. அதற்குப் பெண்கள் செய்ய வேண்டியது இதுதான். பெண் மல்லாந்து படுத்த நிலையில், அவளுடைய கால்களை கணவனின் கழுத்தின் மேல் போட்டு தோள்களைப் பின்னிக் கொள்ளலாம். அவளுடைய பின்புறத்தில் ஒரு சிறிய தலையணையை முட்டுக்கொடுப்பதன் மூலம் யோனி சற்றே உயர்ந்தும் சாய் நிலையிலும் இருக்கும். இந்த நிலையில் ஆணுறுப்பு முழுமையாக உள்ளே செல்ல வசதியாக இருக்கும். உடலுறவின் முடிவில் வெளியாகும் விந்து முழுமையாக கர்ப்பப்பை வாயில் சேகரம் ஆகும். உடலுறவு முடிந்த பிறகு, 20 நிமிடங்களுக்குப் பெண் மல்லாந்து படுத்திருப்பது நல்லது. விந்து உள்ளே பயணிக்க அது உதவும்.

எம்.தாட்சாயினி (21)
நெடுங்கேணி

எனக்கு மூன்று பெண் குழந்தைகள் பிறந்துவிட்டன. ஓர் ஆண் குழந்தையைப் பெற்றுத் தருமாறு என் மாமியார் வீட்டில் சொல்கிறார்கள். எனக்கு ஆண் குழந்தை பிறக்க வழி சொல்லுங்கள்?

டாக்டர் ஞானப்பழம்: உங்கள் மாமியார் வீட்டில் இப்படி எதிர்பார்ப்பது தவறு. உங்களைப் பழிப்பது பொருத்தம் இல்லாததும்கூட. அப்படியே பழித்தாலும் உங்கள் கணவரைத்தான் பழிக்க வேண்டும். உங்களை அல்ல.

ஒவ்வொரு மனிதரின் உடல் செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன. உடல் வளர்ச்சியின் பொருட்டு ஒரு செல் இரண்டாகப் பிரியும்போது, புதிய செல்லும் புதிய 23 ஜோடி குரோமோசோம்களைக் கொண்டிருக்கிறது. இப்படித்தான் செல் பிரிதல் நிகழ்வு நடக்கிறது.

ஆனால், ஆணுடைய விந்தணுவும் பெண்ணின் முட்டையும் வேறு விதமானவை. இந்த செக்ஸ் செல்கள் 23 குரோமோசோம்கள் மட்டுமே உடையவை. இவை ஜோடி செல்கள் அல்ல. இதுதான் என்ன பாலினத்தில் குழந்தை பிறக்கும் என்பதற்கான காரணியாக அமைகின்றன.

பெண்களுக்கான இந்த 23 குரோமசோம்களில் 22 குரோமசோம்கள் நம்முடைய பரம்பரை அடையாளங்களைச் சுமந்து இருப்பவை. மீதம் உள்ள ஒரு குரோமோசோம் எக்ஸ்எக்ஸ் (XX) எனப்படுகிறது. அதே போல ஆண்களுக்கான 22 குரோமோசோம்கள் அவருடைய பாரம்பர்ய அடையாளங்களைச் சுமந்து இருக்கிறது. மீதி ஒரு குரோமோசோம் எக்ஸ்ஒய் (XY) எனப்படும். ஆணுக்கும் பெண்ணுக்குமான இந்த 23-வது குரோமசோம்தான் பிறக்கப்போகும் குழந்தை என்ன பாலினம் என்பதைத் தீர்மானிக்கும். முட்டையானது விந்தணுவில் உள்ள எக்ஸ் குரோமோசோமுடன் இணைந்து கருத்தரித்தால், அது பெண் குழந்தை. முட்டையானது ஆணுடைய விந்தணுவின் ஒய் குரோமோசோமுடன் இணைந்து கருத்தரித்தால், அது ஆண் குழந்தை.

இப்போது சொல்லுங்கள்… பிறக்கப்போவது ஆணா, பெண்ணா என்பதை ஆணுடைய விந்தணுதானே தீர்மானிக்கிறது?

இதை மாமியாருக்கு புரிய வைக்க முடிந்தால், அதை செய்யுங்கள்.

கடந்த பாகத்தை படிக்க: பெண்கள் ‘அதை’ செய்யலாமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here