கிரிக்கெட்டுக்கு எதிராக அல்ல, காவிரிக்கு ஆதரவாக!

0

சென்னை அண்ணாசாலையில் காவிரி மேலாண்மை வாரியம் கோரி நடக்கும் போராட்டத்தில் பங்கேற்ற வைரமுத்து, ‘இந்தப் போராட்டம் கிரிக்கெட்டுக்கு எதிரானது அல்ல; காவிரிக்கு ஆதரவானது’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘தமிழர்களுக்கு நதி உரிமை மறுக்கப்படுகிறது. நாம் நதிக்காக போராடுகிறோம். மண்ணுக்காக போராடுகிறோம். ஸ்கீம் என்பதும் காவிரி மேலாண்மை வாரியம் என்பதும் ஒன்றே என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள கால அவகாசம் நீளமானது தேவையற்றது.

இந்தப் போராட்டம் இன்றோடு முடிவடைது அல்ல. ஒருவேளை நாளையே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் எங்கள் போராட்டத்தை நிறுத்திக் கொள்கிறோம். இல்லாவிட்டால் இந்தப் போராட்டம் தொடரும்.

தமிழ் மண்ணை வெறும் எண்ணெய் எடுக்கும் படுகையாக மாற்றும் முயற்சி ஒருபோது பலிக்காது. நீதி கேட்டு போராடத்தான் வீதிக்கு வந்துள்ளோம்’ என்றார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here