‘என்ன முருகதாஸ் சார், கிரீன்பார்க் ஹோட்டல் ஞாபகம் இருக்கா?’: ஸ்ரீரெட்டியின் அடுத்த அணுகுண்டு!

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தென்னிந்திய சினிமாவையே அதிரவைத்தவர். இவர் கூறும் செய்திகள் அனைத்தும் அதிர்ச்சியாகவே இருக்கிறது.

தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்தவர்களின் முகத்திரையை கிழித்து வருகிறார். அந்த அதிர்ச்சியே இன்னும் அடங்கவில்லை . அதற்குள் தமிழ் திரையுலகையும் கலக்கும் குண்டொன்றை வீசியுள்ளார்.

ஆம்… இவரின் சர்ச்சை வலையில் ஒரு தமிழ் இயக்குனர் சிக்கியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை. நமது சர்கார் படத்தின் இயக்குனர் முருகதாஸ் தான்.

தனது டிவிட்டரில்- என்ன முருகதாஸ் சார் கிரீன் பார்க் ஹோட்டல் ஞாபகம் இருக்கா! அங்க நாம் இருவரும் நிறைய….

வெள்ளிகொண்டா ஸ்ரீநிவாஸ் மூலம் நாம் சந்தித்தோம். மேலும் நீங்கள் எனக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை. என்று பதிவிட்டிருந்தார். மேலும் ‘நீங்களும் நல்ல மனிதர் தான்’ என்றும் சாடை காட்டும் விதமாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. க்ரீன் பார்க் ஓட்டலில் என்ன நடந்திருக்கும்..? என ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here