இந்தவார ராசிபலன்கள் (15.3.2020- 21.3.2020)


ராகு, குரு, புதன், சந்திரனால் நற்பலன் கிடைக்கும். கடந்த காலத்தில் உருவான சிரமங்கள் குறையும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். தம்பி, தங்கைக்கு உதவுவீர்கள்.

வெளியூர் பயணம் சிறப்பாக அமையும். பிள்ளைகள் பெற்றோரிடம் பிடிவாத குணத்துடன் நடந்து கொள்வர். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் அன்பான செயல் குடும்ப வளர்ச்சிக்கு பயன்படும். தொழில், வியாபாரம் செழித்து வளர புதிய மாற்றத்தை செய்வீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதல் படி நடப்பது நன்மை தரும். பெண்கள் செலவில் சிக்கனத்தை பின்பற்றுவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

சந்திராஷ்டமம் : 15.3.2020 காலை 6:00 – 16.3.2020 மாலை 5:07 மணி
பரிகாரம் : விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

சூரியன், புதன், சுக்கிரன், சந்திரன் அளப்பரிய நற்பலனை தருவர். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். பேச்சில் வசீகரம் நிறைந்திருக்கும். உடன்பிறந்தவர் உதவிகரமாக இருப்பர்.

சிலர் அதிக பயன்பாட்டு வசதியுள்ள வீடு, பணியிடம் மாறுகின்ற அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் அறிவாற்றல் மேம்பட ஆலோசனை வழங்குவீர்கள். மனைவி கருத்து இணக்கமுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபார வளர்ச்சியால் பண சேமிப்பு அதிகரிக்கும். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்புக்களை ஏற்பர். பெண்கள் உறவினர் குடும்பத்தில் சுபநிழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.

சந்திராஷ்டமம் : 16.3.2020 மாலை 5:08 – 18.3.2020 இரவு 11:34 மணி
பரிகாரம் : பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

சூரியன், சுக்கிரன், குரு, சந்திரன் வியத்தகு அளவில் நன்மையை வழங்குவர். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாமதமான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பு வேண்டும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு தேவையானதை செய்வீர்கள். வெகுநாளாக இருந்த பிரச்னைக்கு புதிய வழி பிறக்கும். மனைவியின் அன்பில் மனம் மகிழ்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரித்து பணவரவு கூடும். பணியாளர் சிறப்பாக பணிபுரிந்து சலுகை பெறுவர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சி காண்பர்.

சந்திராஷ்டமம் : 18.3.2020 இரவு 11:35 – 21.3.2020 காலை 8:31 மணி
பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

செவ்வாய், புதன், கேது, சனீஸ்வரர், சந்திரன் அனுகூல பலனை தருவர். மனதில் இருந்த கவலை மறையும். பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்றுவீர்கள்.

வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பிள்ளைகள் பெற்றோரின் வழி காட்டுதலை முழு மனதுடன் பின்பற்றுவர். மனைவியின் செயல்கள் குடும்ப ஒற்றுமையை வளர்க்கும். தொழில், வியாபாரத்தில் இடையூறு விலகி வளர்ச்சி கூடும். பணவரவில் திருப்திகரமான நிலை காணப்படும். பணியாளர்கள் நிர்வாகத்திடம் பாராட்டைப் பெறுவர். பெண்கள் புத்தாடை, நகை வாங்கி மகிழ்வர். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம் : 21.3.2020 காலை 8:32 மணி – நாள் முழுவதும்
பரிகாரம் : அம்பிகை வழிபாடு சகல நன்மை தரும்.

குரு, சுக்கிரன், ராகு, சந்திரன் செல்வ வளங்களை தருவர். பேச்சில் வசீகரம் இருக்கும். வாழ்வில் அதிர்ஷ்டகரமான நன்மைகளை பெறுவீர்கள். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர்.

வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கித் தருவீர்கள். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவை தவிர்க்கவும். மனைவி கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபார வளர்ச்சிக்கு தேவையான பணிகளை செய்வீர்கள். அரசு சார்ந்த உதவி பெற அதிக முயற்சி தேவை. பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை குறைத்தால் படிப்பு மேம்படும்.

பரிகாரம் : பசு வழிபாடு சகல வளமும் தரும்.

புதன், சுக்கிரன், சந்திரனால் கூடுதல் நற்பலன் கிடைக்கும். தாமதமான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகளின் செயல்களை கவனித்து இதமான ஆலோசனையால் நல்வழி நடத்துங்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மையை தரும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தருவீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியுடன் கூடிய ஆதாய பணவரவு உண்டு. பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் கணவரின் அன்பில் சந்தோஷ வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் புதிய பயிற்சியை மேற்கொள்வர்.

பரிகாரம் : தட்சிணாமூர்த்தி வழிபாடு சுபவாழ்வு தரும்.

சூரியன், செவ்வாய், சனீஸ்வரர், கேது, சந்திரன் அளப்பரிய நன்மைகளை வழங்குவர். புதியவர்களின் அன்பும் உதவியும் கிடைக்கும். முக்கியமான பணி சிறப்பாக நிறைவேறும்.

குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி கூடும். பிள்ளைகள் பெற்றோரிடம் நண்பருக்கு இணையாகப் பழகுவர். நண்பர்களுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவி குடும்பத்தின் ஒற்றுமையை பேணிக்காத்திடுவார். தொழில், வியாபாரம் புதிய வாடிக்கையாளர் ஆதரவில் செழிக்கும். பணியாளர்கள் கூடுதல் வேலை வாய்ப்புகளை ஏற்றுக் கொள்வர். பெண்கள் விரும்பிய நகை, புத்தாடை வாங்குவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து அதிக மதிப்பெண் பெறுவர்.

பரிகாரம் : மீனாட்சி வழிபாடு செல்வ வளம் தரும்.

புதன், குரு, சந்திரன் அனுகூல பலனை தருவர். பணிகளை புதிய யுக்தியுடன் நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தினர் முழு மனதுடன் உதவுவர். வீடு, வாகனத்தில் உரிய பாதுகாப்பை பின்பற்றவும்.

பிள்ளைகள் அறிவு, செயல்களில் நல்ல முன்னேற்றம் காண்பர். உடல் ஆரோக்கியத்திற்கு சிறு அளவிலான மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். மனைவியின் அறிவார்ந்த செயலை பாராட்டுவீர்கள். தொழிலில் ஏற்படும் இடையூறை தாமதமின்றி சரி செய்யுங்கள். பணியாளர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் பின்பற்றவும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் படிப்பில் சிறந்து ஆர்வமுடன் கலைகளையும் பயில்வர்.

பரிகாரம் : துர்கை வழிபாடு துன்பம் போக்கும்.

சுக்கிரன், சந்திரனால் நன்மை ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. முக்கியமான செயலை நிறைவேற்றுவதில் அதிக கவனம் தேவைப்படும்.

அறிமுகமில்லாதவருக்கு வீடு, வாகனத்தில் இடம் தர வேண்டாம். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கித் தருவீர்கள். நோய் தொந்தரவு பெருமளவில் குறையும். மனைவி அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். பணியாளர்கள் கூடுதல் வேலையை ஆர்வமுடன் ஏற்றுக் கொள்வர். பெண்கள் பிறருக்காக பணப் பொறுப்பை ஏற்க வேண்டாம். மாணவர்கள் ஆசிரியர், பெற்றோரின் வழிகாட்டுதல்படி செயல்பட வேண்டும்.

பரிகாரம் : ஐயப்பன் வழிபாடு வெற்றியளிக்கும்.

சூரியன், சுக்கிரன், ராகு, சந்திரன் ராஜயோக பலனை தருவர். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். மதிநுட்பத்தினால் பணிகள் சிறப்பாக நிறைவேறும்.

உறவினர் மத்தியில் உங்கள் மீதான அன்பு, பாசம் வளரும். வெளியூர் பயணத்தால் எதிர்பார்ப்புக்கள் பூர்த்தியாகும். பிள்ளைகள் தனது நற்செயல்களின் பயனை முழு அளவில் அனுபவிப்பர். இஷ்ட தெய்வ அருளால் எதிரியின் தொல்லை மறையும். மனைவியின் கருத்துக்கள் குடும்ப ஒற்றுமையை வளர்க்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனையில் அபரிமிதமான வளர்ச்சி உண்டு. பணியாளர்களுக்கு பணியிடத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். பெண்கள் தாய்வீட்டு உதவியை பெறுவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம் : பைரவர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

பெரும்பான்மை கிரகங்களால் ஆதாய நற்பலன் கிடைக்கும். இனிய அணுகுமுறையால் அதிக நன்மைகளை பெறுவீர்கள். பணிகளில் ஒருமுகத் தன்மை வளரும்.

வெளியூர் பயணம் புதுவித அனுபவத்தை தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு தேவையானதை செய்வீர்கள். மனைவியின் அதிர்ஷ்டத்தினால் யோகபலன் சிறப்பாக வந்து சேரும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வியத்தகு அளவில் லாபம் கிடைக்கும். பணியாளர்கள் உத்வேகமுடன் பணிபுரிவர். பெண்கள் தாராள பணவரவில் விரும்பிய பொருட்களை வாங்குவர். மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவர்.

பரிகாரம் : முருகன் வழிபாடு சகல வளம் தரும்.

சுக்கிரன், சந்திரனால் நற்பலன் ஏற்படும். உங்களை பற்றி அறியாதவரிடம் சுயபெருமை பேச வேண்டாம். உறவினரின் ஆதரவு மனதில் ஊக்கம் தரும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

பிள்ளைகளின் சொல்லும் செயலும் சிறப்பாக அமைந்திட உதவுவீர்கள். பூர்வ சொத்தில் பணவரவு அளவுடன் இருக்கும். உடல் நலனில் அக்கறை தேவை. மனைவியின் பாசமுள்ள செயல் மகிழ்ச்சியை தரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான புதிய பாதை உருவாகும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் பிறர் பொருளை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

பரிகாரம் : சிவன் வழிபாடு நம்பிக்கை தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here